- Home
- Cinema
- வெற்றிமாறனின் விடுதலை உள்பட இத்தனை தமிழ் படங்கள் ஐபோனில் படமாக்கப்பட்டுள்ளதா..! ஆச்சர்ய தகவல் இதோ
வெற்றிமாறனின் விடுதலை உள்பட இத்தனை தமிழ் படங்கள் ஐபோனில் படமாக்கப்பட்டுள்ளதா..! ஆச்சர்ய தகவல் இதோ
செல்போன்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. இந்த செல்போன்களின் வளர்ச்சியும் அபரிமிதமான ஒன்று. அப்படி சினிமாவில் ஐபோனை பயன்படுத்தி படமாக்கப்பட்ட படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் திரைப்படம் விடுதலை. சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் 30-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐபோனில் தான் படமாக்கப்பட்டு உள்ளன.
விடுதலை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அடந்த காடுகளில் தான் படமாக்கப்பட்டது. அங்கு கேமராக்களையும், அதற்கு தேவையான சாதனங்களையும் சுமந்து செல்வது சவாலாக இருக்கும் என்பதனால் ஐபோனை பயன்படுத்தி காட்சிப்படுத்தினாராம் வெற்றிமாறன். ஐபோன் 12 மாடல் போனை பயன்படுத்தி விடுதலை பட காட்சிகளை எடுத்தாராம் வெற்றிமாறன். இதன்மூலம் தயாரிப்பு செலவும் குறைந்ததாக கூறப்படுகிறது.
அகண்டன்
சந்தோஷ் நம்பிராஜன் இயக்கிய அகண்டன் என்கிற தமிழ் படமமும் ஐபோனில் படமாக்கப்பட்டது தான். இப்படத்தை ஐபோன் 11-ல் படமாக்கி இருந்தனர். இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் தேசிய விருது வென்ற டூலெட் என்கிற தமிழ் படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானவர் ஆவார். அனைவரும் போனில் படம் பார்க்கும் போது ஏன் போனிலேயே ஒரு படத்தை எடுக்கக்கூடாது என தோன்றியதனால் தான் அகண்டன் படத்தை எடுத்ததாக கூறியுள்ளார் சந்தோஷ். இப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... சினிமாவில் 40 ஆண்டுகளை கடந்த மீனா... ரஜினிகாந்த் மற்றும் 80ஸ் நட்சத்திரங்கள் இணைந்து கொண்டாடிய பிரம்மாண்ட விழா
லாக்டவுன்
நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவான ஒரு குறும்படம் தான் லாக்டவுன். இதனை ஆதவ் கண்ணதாசன் இயக்கி இருந்தார். இந்த குறும்படம் நேரடியாக யூடியூப்பில் வெளியானது. இந்த குறும்படம் லாக்டவுன் சமயத்தில் படமாக்கப்பட்டது.
அடடே
தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆன அடடே என்கிற திரைப்படமும் ஐபோனில் தான் படமாக்கப்பட்டது. கமல் சரோ முனி என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஐபோன் 5-ல் படமாக்கப்பட்டது. தயாரிப்பு செலவை குறைப்பதற்காகவே இந்த படத்தை ஐபோனில் படமாக்கியதாக இயக்குனர் கூறினார்.
இதையும் படியுங்கள்... கண்கள் நீயே... காற்றும் நீயே..! செல்ல மகளுடன் முதன்முறையாக போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா - வைரல் கிளிக்ஸ் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.