கண்கள் நீயே... காற்றும் நீயே..! செல்ல மகளுடன் முதன்முறையாக போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா - வைரல் கிளிக்ஸ் இதோ
நடிகை ஸ்ரேயா சரண் தனது செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடியபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உனக்கு 20 எனக்கு 18 படத்தில் நடிகை திரிஷாவின் தோழியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா. இதையடுத்து 2005-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மழை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஸ்ரேயா அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்த ஸ்ரேயாவுக்கு ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சிவாஜி படத்தில் ஹீரோயினாக நடித்த பின்னர் விஜய் உடன் அழகிய தமிழ்மகன், விக்ரம் ஜோடியாக கந்தசாமி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார் நடிகை ஸ்ரேயா.
இதையும் படியுங்கள்... லியோ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கிய பிரபலம் - வைரலாகும் வீடியோ
இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சீக்ரெட்டாக வைத்திருந்த ஸ்ரேயா, 10 மாதங்கள் கழித்து தான் வெளியிட்டார்.
நடிகை ஸ்ரேயா அவரது மகளுக்கு ராதா என பெயரிட்டு உள்ளார். குழந்தை பிறந்த பின்பும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, தற்போது கப்ஸா என்கிற பான் இந்தியா படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், நடிகை ஸ்ரேயா தனது மகள் ராதா உடன் கொஞ்சி விளையாடியபடி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. நடிகை ஸ்ரேயா மகளுடன் நடத்திய முதல் போட்டோஷூட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்