MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2021 Notable deaths : 2021-ல் நம்மை விட்டு பிரிந்த பிரபலங்கள்... மீள்பார்வையுடன் புகைப்பட தொகுப்பு..

2021 Notable deaths : 2021-ல் நம்மை விட்டு பிரிந்த பிரபலங்கள்... மீள்பார்வையுடன் புகைப்பட தொகுப்பு..

2021 Notable deaths : பல அனுபவங்களை 2021 நமக்கு தந்து விட்டது. அதிலும் இழப்புகள் மிகப்பெரிய அளவிலேயே இருந்தது. அந்த வகையில் 2021-ல் நம்மை விட்டு மறைந்த திரைபிரபலங்கள் குறித்த தகவலை இங்கு பார்க்கலாம்...

5 Min read
Author : Kanmani P
Published : Dec 27 2021, 09:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
vivek

vivek

vivek :  இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை என சமூக சீர்கேடுகளை பகிரங்கமாக நகைச்சுவை ததும்ப சொன்னதன் காரணமே விவேக்  சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும்  அழைக்கப்பட்டார். பின்னாளில் அப்துல்கலாமின் பால் ஈர்க்கப்பட்ட விவேக் அவரின் லட்சியங்களைசிகை தாங்கி செய்து வந்தார். கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த விவேக் கடந்த  ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
214
Nedumudi Venu

Nedumudi Venu

Nedumudi Venu : தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்ல போறோம், சர்வம் தாளமயம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் 73 வயதான பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு.  3 தேசிய விருதுகள் மற்றும் 6 மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ள இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்  மீண்டார். பின்னர்  அக்டோபர் 10 -ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

314
Actress Jeyanthi

Actress Jeyanthi


Actress Jeyanthi : நடிகை ஜெயந்தி, தென்னிந்திய மொழிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தேசிய விருதையும் பெற்றுள்ளார் . 1960 மற்றும் 70 களில் வெள்ளித்திரையில் மிகவும் பிஸியான நாயகியாக வலம் வந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி, கடந்த சில வருடங்களாகவே ஆஸ்துமா பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், ஜூலை 26 காலை உயிரிழந்தார். 

414
RNR Manohar

RNR Manohar

RNR Manohar : திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் தமிழ் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் பணியாற்றுகிறார்.  இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார். பின்பு 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 61 வயதான இவர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.  அவர் நவம்பர் 17 காலை 8.30 மணியளவில்  மனோகரன் உயிர் பிரிந்துள்ளது.

514
actor pandu

actor pandu

actor pandu : ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமான பாண்டு‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சூழலில் மே 6 அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டு (74) காலமானார்.

614
Venkat Suba

Venkat Suba

 Venkat Suba : வெங்கட் சுபா சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாப்புலரானவர். அவர் சொந்தமாக youtube சேனல் தொடங்கி அதில் சினிமா விமர்சனங்கள், பிரபலங்களின் பேட்டிகள் என எடுத்து வெளியிட்டு வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 29-ம் தேதி காலை 12.48 மணிக்கு காலமானர்.

714
SP Jananathan

SP Jananathan

SP Jananathan : தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.பி.ஜனநாதன். கடைசியாக இவர்  விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கி இருந்தார்.  படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 'லாபம்' படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 11ம் தேதி எடிட்டிங் பணியில் இருந்து ஜனநாதன் வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறியுள்ளார். வெகு நேரமாக அவர் எடிட்டிங் பணி நடக்கும் இடத்திற்கு வராததால் அவருடைய உதவியாளர் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.  பின்னர் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இயக்குனர் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக மார்ச் 14-ம் தேதி உயிரிழந்தார்.

814
KV Anand

KV Anand


KV Anand : தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் கே.வி.ஆனந்த் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படமான ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாள படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றவர். 1999ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ததற்காக பாராட்டப்பட்டவர். செல்லமே, விரும்புகிறேன், முதல்வன், நேருக்கு நேர், காதல் தேசம் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.  அதன் பின்னர் அயன், கோ, கவன், காப்பான், மாற்றான், அநேகன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். 

தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏப்ரல் 30 அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

914
director thamira

director thamira

director thamira : தமிழில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'ரெட்டி சுழி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தாமிரா. இதை தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு, சமுத்திர கனி - ரம்யா பாண்டியன் நடித்த 'ஆண் தேவதை' படத்தை இயக்கி இருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அசோக் நகரில் உள்ள, மாயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த தாமிராவிற்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட, உயிர் காக்கும் கருவிகளுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 27 காலை தாமிரா(53) 

1014
Joker Thulasi

Joker Thulasi

Joker Thulasi : தமிழ் சினிமாவில் மருதுபாண்டி என்ற படத்தின் மூலமாக 1990இல் திரையுலகில் அறிமுகமானவர் ஜோக்கர் துளசி. அதன் பின்னர் உடன்பிறப்பு, தமிழச்சி, அவதாரபுருஷன் ஆகிய படங்களில் தன்னுடைய நடிப்பால் தனி கவனம் ஈர்த்தவர். சின்னத்திரையில் கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி உள்ளிட்ட சன் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  ஜோக்கர் துளசி (71) மே  10 அன்று உயிரிழந்தார்.

1114
Actress Chithra

Actress Chithra

 Actress Chithra :  கே.பாலசந்தரால் ’அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ‘ராஜபார்வை’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர், மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ’ஆட்ட கலசம்’ படம் மூலம் ஹீரோயின் ஆனார். பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், நல்லெண்ணெய் விளம்பரம் மூலம் மேலும் பிரபலமானார்.

பிறகு திருமணமாகி செட்டிலான அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சித்ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆகஸ்ட் 21 அன்று வீட்டிலேயே அவர் உயிர் பிரிந்தது.

1214
Actor srikanth

Actor srikanth

Actor srikanth : வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். இந்த படத்தின் 4 புதிய முகங்களை இயக்குனர் சி.வி.ஸ்ரீதர், அதில் ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் வெண்ணிரடை மூர்த்தி ஆகியோர். தமிழ் படங்களில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகனாக நடித்த முதல் ஆண் நடிகர் இவர்தான் என்பதும் குறிப்பிடித்தக்கது.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'குடியரசு'. இதன் பின்னர் உடல்நல பிரச்சனைகள் மற்றும் வயது மூப்பு காரணமாக திரையுலகை விட்டு விலகினார். சுமார் 44 ஆண்டும் இடைவிடாமல் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் அக்டோபர் 12 அன்று  காலமானார்.

1314
Actor Maran

Actor Maran

 Actor Maran : துணை நடிகர் மாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த ஜூன் 4 காலமாகியுள்ளார். அவருக்கு வயது 48. 2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'கில்லி' படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யின் நண்பராக இவரது கதாப்பாத்திரம் மிகவும் புகழ்பெற்றது.

1414
Nitish Veera

Nitish Veera

Nitish Veera : புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, கபாலி, காலா, அசுரன் மற்றும் கடைசியாக விஜய் சேதுபதியுடன் லாபம் போன்ற திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்த நிதிஷ் வீரா மே 17 அன்று கொரோனா தொற்றால் காலமானார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
2nd ODI • NZ vs IND 2026
Live
NZNZ
134
INDIND
(3.4 ov)17/2
IND need 118 runs in 260 balls
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Box Office Report: சூர்யாவின் 'சீன்' முதல் நாளில் ரூ. 34+ கோடி வசூல்; திணறும் மூக்குத்தி அம்மன்-2; ராமாயணா வசூல் என்ன?
Recommended image2
Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Recommended image3
CM Vijay : மீண்டும் நடிக்க முடிவெடுத்த விஜய்... முதல்வரை இயக்கப்போகும் கெளதம் மேனன் - சுடச்சுட வெளிவந்த அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved