கூலி படத்துக்கு முன் 400 கோடி வசூல் அள்ளிய டாப் 5 டக்கரான தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ள நிலையில், இதற்கு முன் அந்த மைல்கல்லை எட்டிய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Top 5 Highest Grossing Tamil Films
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரிலீஸ் ஆன நான்கு நாட்களிலேயே 400 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருந்தது. இந்த நிலையில், கூலிக்கு முன்னர் 400 கோடி வசூல் அள்ளி சாதனை படைத்த தமிழ் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
2.0
2018 இல் வெளியான இந்தப் படத்தை எஸ். ஷங்கர் இயக்கியுள்ளார், ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் உலகளவில் 691 கோடி ரூபாய் வசூல் செய்தது. வெளிநாடுகளில் 172 கோடி ரூபாயும், இந்தியாவில் 519 கோடி ரூபாயும் வசூலித்த இப்படம் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படமாக திகழ்ந்து வருகிறது.
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 2023ல் வெளியான இந்தப் படம் உலகளவில் 650 கோடி ரூபாய் வசூலித்தது. வெளிநாடுகளில் 196 கோடி ரூபாயும், இந்தியாவில் 454 கோடி ரூபாயும் வசூலித்து இருந்தது. இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.
லியோ
தளபதி விஜய் நடித்த இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 2023 இல் வெளியான இந்தப் படம் உலகளவில் 605 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்தியாவில் 401.9 கோடி ரூபாய் மொத்த வசூலும், வெளிநாடுகளில் 204 கோடி ரூபாயும் வசூலித்தது. இப்படம் தான் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாகும்.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ரவி மோகன், கார்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 2022ல் வெளியான இப்படம் உலகளவில் 488.36 கோடி ரூபாய் வசூலித்தது. இந்தியாவில்313.36 கோடி ரூபாய் மொத்த வசூலும், வெளிநாடுகளில் 175 கோடி ரூபாயும் வசூலித்தது இப்படத்தின் முதல் பாகம்.
விக்ரம்
2022 இல் வெளியான இந்தப் படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்தார், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் உலகளவில் 414.43 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்தியாவில் 289.43 கோடி ரூபாய் மொத்த வசூலும், வெளிநாடுகளில் 125 கோடி ரூபாயும் வசூலித்தது. இப்படத்தை கமல்ஹாசன் தான் தயாரித்து இருந்தார்.