ஜெயிலர் 2, கூலியை விட ரஜினி பிறந்தநாளன்று வரவுள்ள செம ஒர்த்தான அப்டேட் என்ன தெரியுமா?
Rajinikanth Birthday : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்களின் அப்டேட் மட்டுமின்றி மற்றுமொரு மாஸ் அப்டேட்டும் வர உள்ளதாம்.
Rajinikanth
ரஜினி பிறந்தநாள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்றாலே அப்டேட்டுகளுக்கு பஞ்சமிருக்காது. அவர் நடிப்பில் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரண்டு படங்கள் தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இதில் கூலி படத்தை லோகேஷ் கனகராஜும், ஜெயிலர் 2 படத்தை நெல்சனும் இயக்குகிறார்கள். இந்த இரண்டு படங்களின் புரோமோவும் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thalapathi Re Release
தளபதி ரீ-ரிலீஸ்
இதுதவிர ரஜினி பிறந்தநாள் என்றாலே அவர் நடித்த பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆவதுண்டு, கடந்த ஆண்டு அவரின் பாபா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று, அவர் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டையாடிய தளபதி படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் உடன் மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.
இதையும் படியுங்கள்... ஆடு பகை குட்டி உறவா? தன் படத்தை எதிர்த்த தாத்தா அன்புமணி; பேத்தி படத்துக்கு உதவிய ரஜினிகாந்த்!
Rajinikanth, Maniratnam
ரஜினி - மணிரத்னம் காம்போ
தளபதி படத்துக்கு பின்னர் ரஜினிகாந்தும் மணிரத்னமும் இணைந்து பணியாற்றாமலே இருந்து வந்தனர். இந்த நிலையில், இந்த காம்போ தற்போது 33 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைய உள்ளதாக அண்மையில் தகவல் கசிந்த நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி சர்ப்ரைஸாக வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒர்த்தான அப்டேட்டுக்காக தான் ரஜினி ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
Thug Life
தக் லைஃப்
இயக்குனர் மணிரத்னம் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள தக் லைஃப் படத்தை இயக்கி முடித்துள்ளார். அப்படத்தில் கமலுடன் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தக் லைஃப் திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அப்படம் ரிலீஸ் ஆன பின்னரே ரஜினி பட பணிகளை தொடங்கும் முடிவில் இருக்கிறாராம் மணிரத்னம்.
இதையும் படியுங்கள்... திருவண்ணாமலையில் நிலச்சரிவா? எப்போ? அதிர்ச்சியான ரஜினிகாந்த்!!