பாகிஸ்தானுக்கு ஈவு இரக்கமே காட்டக்கூடாது..! அடித்து நொறுக்கும் கூமா பட்டி தங்கராஜ்..!
ஐநா சபையில் இவர்களால் எங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என இந்தியா ஒரு கோரிக்கை வைத்தால், சீனா அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. இந்தப்பக்கம் பார்த்தால் பாகிஸ்தான்

ஒரே ரீல்ஸ் மூலம் உலகம் முழுவதும் திரும்பிப்பார்க்க வைத்தவர் கூமாபட்டி தங்கராஜ். கூமாபட்டி கிராமத்தை தனது தனித்துவமான பேச்சின் மூலம் ‘ஏங்க...’ என வீடியோ போட்டு கூமாபட்டி கிராமத்தை அடையாளப்படுத்தியதோடு அவரே ஒரு செலிப்ரட்டியாகவும் மாறி கலக்கி வருகிறார். "சிங்கிள் பசங்க" போன்ற டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, ரசிகர்களை ஈர்த்து வருகிறார். பொழுதுபோக்காளார் என பலரும் நினைத்திருக்க, தனக்குள் இருக்கும் நாட்டுப்பற்றை ஆழமாகப் பேசி ஆச்சர்யப்படுத்தி வருகிறார் கூமாபட்டி தங்கராஜ்.
அவரது பேட்டியில், ‘‘ஜாதியைப் பற்றி பேசுபவர், மதத்தைப் பற்றி பேசுவர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஒருத்தன் ஜாதியை அடையாளப்படுத்துகிறான், என் ஜாதிதான் பெரிது என கூறுகிறான் என்றால் அவனை புறக்கணிக்க வேண்டும். தேசத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். பள்ளி பருவங்களில் யாரெல்லாம் தேசத்திற்கு உழைத்தார்கள் என்று என் நெஞ்சில் மார்பை நிமிர்த்தி பேசினேனோ, இப்போது அவர்களை தலை வணங்கி, டுத்து கும்பிட மாட்டேன். இவர்தான் தேசத்தில் ஆணிவேர் என்று சொல்வீர்களே.. அவர்களை துளியளவு வணங்க மாட்டேன். இனிமேல் இவர்களை வணங்க கூடாது, இவர்களைப் பற்றி பேசவும் கூடாது. எதிர்காலத்தில் இவர்களது கல்லறைகள்கூட இந்தியாவில் இருக்க கூடாது என்று ஒரு முடிவை எடுத்து விட்டேன்.
உண்மையிலேயே தன் தேசத்திற்காக வாழ்க்கையை அர்பணித்தவர்கள் யார்? செத்தவர்கள் யார் என்று பார்த்தால் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த நபர்களை இன்று தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். உண்மையிலேயே பிரிட்டிஷ் கவர்மெண்ட்டை நேருக்கு நேர் எதிர்த்தவர்களை மதிக்க தவறி விட்டோம். அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. உண்மையான மாவீரன் யார் என்று எனக்கே தெரியவில்லை. இப்போது இங்கே இருக்கிறவர்கள் காசிக்கு செல்கிறார்கள். அங்கிருப்பவர்கள் ராமேஸ்வரம் வருகிறார்கள். இவர்களது கலாச்சார ஒற்றுமை பார்க்கும்போது மாறுபட்டதாக இருக்கிறது. ஆனால் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
இந்த நாடு இவ்வளவு பலவீனமாக ஆனதற்கு காரணம், நமக்குள் ஒற்றுமை இல்லை. கலாச்சார ரீதியாக இவ்வளவு ஒற்றுமை இருந்தது. அரசியல் ரீதியாக ஒற்றுமை இல்லை. டெல்லியில் நடந்ததை எல்லாமே பயங்கரவாத தாக்குதல் என்று சொல்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் திட்டமிட்டு, நேர்த்தியாக, துல்லியமாக செயல்பட்டு இருக்கிறார்கள். டாக்டர் என்பவன் மனித உயிரைக் காப்பாற்றக்கூடிய கடவுள். அவனே மனிதாபி இல்லாமல் மனித உயிரை கொள்வதற்கு இவ்வளவு வக்கிரத்தில் இறங்கி விட்டான் என்றால் அவனது சிந்தனை எப்படி இருந்திருக்கும் பாருங்கள்?
ஐநா சபையில் இவர்களால் எங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என இந்தியா ஒரு கோரிக்கை வைத்தால், சீனா அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. இந்தப்பக்கம் பார்த்தால் பாகிஸ்தான் ஓரத்தில்... அந்தப்பக்கம் பார்த்தால் பங்களாதேஷ். கீழே பார்த்தால் இலங்கை. நம்] நாட்டைச் சுற்றி இவ்வளவு பேர் எதிர்ப்பாக இருக்கும்போது நாம் தேசத்தை தான் முன்னிலைப்படுத்த வேண்டும். பாகிஸ்தானுக்கு ஈவு இரக்கமே காட்டக்கூடாது. ஜாதி கலவரம் என்றால் பயங்கரமாக வைரலாகிறது, ஸ்பிரிட் ஆகிறது. மதக் கலவரம் நடந்தால் பயங்கரமாக பரவுகிறது. தேசத்தின் எல்லையில் ராணுவ வீரர் இறந்து விட்டால், அந்த அளவுக்கு தாக்கம் ஏற்படவில்லை.
நாஜி கலாச்சாரம் எப்படி இருக்கிறது என்பதை படித்து இருக்கிறேன். ஹிட்லரை பற்றி படித்து இருக்கிறேன். ஜோசப் ஸ்டாலினை பற்றியும் படித்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் முழுக்க முழுக்க தேசியத்தைத்தான் முன்னிலைப்படுத்துகிறார்கள். ஜோசப் ஸ்டாலினிடம் போய் தேசத்தை தவிர வேறு எதைப்பேசினாலும் வேலை செய்யாது. அவர்கள் தேசத்தைத் தான் முன்னிலைப்படுத்தி பார்த்தார்கள். வேறு எதையும் யோசிக்கவில்லை. அப்படிப்பட்ட தலைவர்கள் இருந்தால் பலகீனமான நாடுகள் கூட பலமாக மாறும். ஏங்க இங்க பாருங்க என்கிற தங்கப்பாண்டி வேறு. நாட்டை பற்றி சிந்திக்கும் இந்த தங்கப்பாண்டி வேறு’’ என்கிறார் கூமாபட்டி தங்கராஜ்
