MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nivetha Thomas : ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை நிவேதா தாமஸ்... வைரலாகும் ஸ்லிம் லுக் போட்டோஸ்...!

Nivetha Thomas : ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை நிவேதா தாமஸ்... வைரலாகும் ஸ்லிம் லுக் போட்டோஸ்...!

Nivetha Thomas Slim Look : 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் சீரியலான 'மை டியர் பூதம்' மூலம் பிரபலமான நிவேதா தாமஸ், சமீபத்தில் ஒரு படத்துக்காக உடல் எடையை அதிகரித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் ஸ்லிம் லுக்கிற்கு மாறி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 20 2026, 07:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nivetha Thomas Slim Look
Image Credit : Asianet News

Nivetha Thomas Slim Look

90-களில் தொலைக்காட்சித் தொடர்களை பார்த்து வளர்ந்தவர்களுக்கு நிவேதா தாமஸ் என்ற பெயர் நிச்சயம் பரிச்சயமானதுதான். குழந்தை நட்சத்திரமாக ‘மை டியர் பூதம்’ தொடரில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே.. மஞ்சளில் அசத்தும் நிவேதா தாமஸ் - கூல் கிளிக்க்ஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
‘மை டியர் பூதம்’ நிவேதா தாமஸ் நினைவிருக்கிறதா?
Image Credit : instagram

‘மை டியர் பூதம்’ நிவேதா தாமஸ் நினைவிருக்கிறதா?

90-ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்றாக இருந்தது ‘மை டியர் பூதம்’. ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்ததும் தொலைக்காட்சியில் இந்தத் தொடரை தவறாமல் பார்த்த ரசிகர்கள் ஏராளம். அந்தத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதா தாமஸ், தனது இயல்பான நடிப்பால் அப்போதே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சின்னத்திரையில் கிடைத்த அறிமுகத்தைத் தொடர்ந்து, நிவேதா தாமஸ் சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடங்கினார். தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலும் முக்கிய கதாபாத்திரங்களிலும், கதாநாயகியாகவும் நடித்து தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இவர் தான் என் புருஷன்... எங்களுக்கு 2 குழந்தைங்க இருக்கு... கணவரை அறிமுகப்படுத்திய நிவேதா தாமஸ்; ஷாக்கான Fans!

Related Articles

Related image1
அழகில் அனைவரையும் மூழ்கடிக்கும் கியூட் நிவேதா தாமஸ் போட்டோ கேலரி
Related image2
கமல், ரஜினியின் ரீல் மகளா இது... இப்படி குண்டாகிட்டாங்களே..! நிவேதா தாமஸ் வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
34
கதாபாத்திரத்திற்காக எடை அதிகரித்த நடிகை
Image Credit : instagram/@i_nivethathomas

கதாபாத்திரத்திற்காக எடை அதிகரித்த நடிகை

நிவேதா தாமஸ் நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் ‘35 சின்ன கதா காடு’. இதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக அவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தின் தோற்றத்திற்கு ஏற்றவாறு தனது உடல் எடையிலும் மாற்றம் செய்திருந்தார்.

படம் வெளியான சமயத்தில், நிவேதாவின் மாறுபட்ட தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக அமைந்தது. வழக்கமான ஸ்லிம் தோற்றத்தில் இருந்து வித்தியாசமாக அவர் காணப்பட்டதால், சமூக வலைதளங்களிலும் அவரது லுக் குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.

நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு

44
மீண்டும் ஃபிட்டான லுக்கில் நிவேதா!
Image Credit : others

மீண்டும் ஃபிட்டான லுக்கில் நிவேதா!

இந்நிலையில், தற்போது நிவேதா தாமஸ் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம் லுக்கிற்கு திரும்பியுள்ளார். அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில் மிகவும் ஃபிட்டாகவும் ஸ்டைலிஷாகவும் காட்சியளிக்கிறார். இந்த புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், நிவேதாவின் மாற்றத்தை பாராட்டி வருகின்றனர். ஒரு கதாபாத்திரத்திற்காக உடல் தோற்றத்தில் மாற்றம் செய்து, பின்னர் மீண்டும் தனது வழக்கமான தோற்றத்திற்கு அவர் திரும்பியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குழந்தை நட்சத்திரமாக ‘மை டியர் பூதம்’ மூலம் பிரபலமான நிவேதா தாமஸ், இன்று பல மொழிகளில் கதாநாயகியாக உயர்ந்திருப்பது அவரது திரைப்பயணத்தின் முக்கியமான வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய புகைப்படம், அவரது ரசிகர்களிடையே மீண்டும் பழைய நினைவுகளை கிளறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிரிக்கும் சின்ன தாமரையாய் மாறி... சேலையில் சும்மா நச்சுனு போஸ் கொடுத்த நிவேதா தாமஸ்! போட்டோ கேலரி..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
STR on CM Vijay: அரசியல் பிரவேசம் எப்போது.! சூசகமாக பதில் சொன்ன சிம்பு.! என்ன சொன்னார் தெரியுமா?!
Recommended image2
Rocking Star Yash: யஷ் குளோபல் ஸ்டார் ஆன கதை! இதன் பின்னணியில் உள்ள ஒரு 'மகா மந்திரம்'!
Recommended image3
Hi Movie First Review : கவின் - நயன் ஜோடி பாஸ் ஆனதா? ஃபெயில் ஆனதா? ஹாய் படத்தின் முதல் விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
அழகில் அனைவரையும் மூழ்கடிக்கும் கியூட் நிவேதா தாமஸ் போட்டோ கேலரி
Recommended image2
கமல், ரஜினியின் ரீல் மகளா இது... இப்படி குண்டாகிட்டாங்களே..! நிவேதா தாமஸ் வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved