Nikki Galrani : திருமணத்திற்கு பிறகு அதிக போட்டோ சூட் நடத்தும் நிக்கி கல்ராணி...நியூ போட்டோஸ் இதோ
தனது அழகான போட்டோ ஷூட்டையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோ சூட் வைரலாகி வருகிறது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. தமிழில் டார்லிங் என்னும் படம் மூலம் பிரபலமடைந்தவர் இவர்.
nikki galraniஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்த இந்த படத்தில் கொலு கொலு நாயகியாக ரசிகர்களை கவர்ந்திழுத்திருந்தார்.
இதை தொடர்ந்து யாவராயினும் நா காக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, ஹர ஹர மகாதேவி, தேவ், ராஜ வம்சம், இடியட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...thunivu pre release : ஃப்ரீ ரிலீஸுக்கு நோ நோ சொன்ன அஜித்குமார்..கன்பார்ம் செய்த ஏ. கே யின் மேனேஜர்
கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நாயகியாக வலம் வருகிற இவர் கடந்த மார்ச் மாதம் தனது நீண்ட நாள் காதலரான ஆதி பிணிசெட்டியை திருமணம் செய்து கொண்டார்.
இவர் தமிழில் மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், வல்லினம், கோச்சடையான், யாவராயினும் நா காக்க, மரகத நாணயம், போர் வீரன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடித்து பிரபலமானவர்.
Nikki Galrani
இதில் யாவராயினும் நா காக்க படத்தில் ஒன்றாக நடித்த நிக்கி கல்ராணிக்கும்- ஆதிக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
Nikki Galrani
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் சுற்றம் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றது. இதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகின.
Nikki Galrani
ஹனிமூன் சென்ற இந்த ஜோடியின் புகைப்படங்களும் வைரல் ஆனது. தற்போது நிக்கி கல்ராணி நிறங்கள் மூன்று உள்ளிட்ட பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
Nikki Galrani
இதற்கிடையே தனது அழகான போட்டோ ஷூட்டையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோ சூட் வைரலாகி வருகிறது.