அஜித் குமாரின் மேலாளரான சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரு நல்ல படம் தானே விளம்பரம் என பதிவு செய்து " அஜித் குமார் நோ சொன்ன தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

எச் வினோத்குமார் இயக்கத்தில் தற்போது அஜித் நடித்துவரும் துணிவு படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. வரும் பொங்கலுக்கு படம் வெளியாகும் என்பதால் இதன் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக நேர்கொண்ட பார்வை வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்த ஹெச். வினோத் இந்தப் படத்தையும் இயக்க போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.

இதில் மஞ்சு வாரியர், பிக் பாஸ் புகழ் சிபி, பாவனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாரிசும்- துணிவும் நேருக்கு நேர் மோதவுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கி கொள்ளை சம்மந்தப்பட்ட இந்த படத்தில் அஜித்தின் தோற்றத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவரின் ரசிகர்கள். முன்னதாக வெளியான இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததால் இந்த படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இதற்கிடையே துணிவு படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. 

இதற்காக அஜித்குமாரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாம், ஆனால் அதற்கு அவர் நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு வேலை அஜித்குமார் ஓகே சொல்லி இருந்தால் சென்னை உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட நிகழ்ச்சியின் மூலம் ஃப்ரீ ரிலீஸ் செய்யப்படும் என தகவல் வெளியாகிய நிலையில் தற்போது அஜித் குமாரின் மேலாளரான சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரு நல்ல படம் தானே விளம்பரம் என பதிவு செய்து " அஜித் குமார் நோ சொன்ன தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

Scroll to load tweet…