அட்லீனாலே காப்பிதானா... மகனின் பெயரைக்கூடவா காப்பி அடிச்சு வைப்பீங்க? - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, அவரது மகனின் பெயரை காப்பி அடித்து வைத்துள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தமிழில் இதுவரை இயக்கிய 4 படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனால் தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனர்கள் பட்டியலில் அட்லீ இடம்பிடித்து இருந்தாலும், இவர் படங்களை காப்பி அடித்து எடுக்கிறார் என்கிற சர்ச்சை அவரது முதல் படத்தில் இருந்தே அவரை துரத்தி வருகிறது. அதன்படி அட்லீயின் இயக்கிய ராஜா ராணி திரைப்படம் மணிரத்னத்தின் மெளன ராகம் படத்தில் காப்பி என்று கூறப்பட்டது.
அதேபோல் விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி படம் சத்ரியன் படத்தின் காப்பி என்றும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இவர்கள் இணைந்த மெர்சல் படம் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்றும், இதே கூட்டணியில் உருவான பிகில் திரைப்படம் ஷாருக்கானின் சக்தே இந்தியா படத்தின் காப்பி என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த விமர்சனங்களையெல்லாம் தனது அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தவிடுபொடி ஆக்கி வருகிறார் அட்லீ.
இதையும் படியுங்கள்...
தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக காலடி எடுத்து வைக்கிறார் அட்லீ. ஷாருக்கான் உடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைகாண உள்ளது. இப்படமும் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு கைதியின் டைரி படத்தின் காப்பி என்றும் சர்ச்சை எழுத்துள்ளது.
இப்படி தொடர்ந்து காப்பி சர்ச்சைகளில் சிக்கி வரும் அட்லீக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மீர் என பெயரிட்டுள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தற்போது அந்த பெயரையும் அவர் காப்பி அடித்து வைத்துள்ளதாக நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர். அட்லீ தனது குழந்தைக்கு மீர் என பெயர் வைத்துள்ளார். நடிகர் ஷாருக்கானின் தந்தை பெயரும் மீர் தானாம். அந்த பெயரை காப்பி அடித்து தான் அட்லீ குழந்தைக்கு பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஒரு படம் பிளாப் ஆனா இப்படியா அவமானப்படுத்துவீங்க... பிரபல ஓடிடி நிறுவனத்தின் செயலால் கடுப்பான சமந்தா ரசிகர்கள்