நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லனு சொன்னீங்க... அப்போ இது என்ன? - துணிவு படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
அஜித் நடித்துள்ள துணிவு படத்திற்காக துபாயில் ஸ்கை டைவிங் செய்து புரமோஷன் செய்யப்பட்ட வீடியோ நேற்று வெளியாகி வைரலானது.
நடிகர் அஜித்தின் 61-வது படம் துணிவு. இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். அஜித்தை வைத்து இவர் இயக்கும் மூன்றாவது படம் இதுவாகும். இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்கள் ரிலீசாகி இருந்தன. இந்த இரண்டு படங்களையும் தயாரித்த போனி கபூர் தான் துணிவு படத்தையும் தயாரித்துள்ளார்.
துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் படத்தின் புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. வழக்கம்போல் இந்த படத்தின் புரமோஷனிலும் தான் கலந்துகொள்ள மாட்டேன் என்பதை திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் நடிகர் அஜித்குமார்.
அதுமட்டுமின்றி, ‘ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லை. அதற்கான புரமோஷனை அதுவே செய்துகொள்ளும்’ என்று தனது மேலாளர் வாயிலாக அறிக்கையெல்லாம் வெளியிட்டு இருந்தார். இந்த பதிவு தான் தற்போது அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஏனெனில் நேற்று துணிவு படத்திற்காக துபாயில் ஸ்கை டைவிங் செய்து புரமோஷன் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது.
இதையும் படியுங்கள்... டிசம்பர் 31 குறிச்சி வச்சிக்கோங்க... 'துணிவு' படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியிட தயாரான படக்குழு!
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லனு சொல்லீட்டு பறந்து பறந்து புரமோஷன் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அப்போ துணிவு நல்ல படம் இல்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபுறம் அஜித்தின் மேலாளர் பதிவிட்ட டுவிட்டை குறிப்பிட்டு மீம்ஸ்களும் போடப்பட்டு வருகின்றன.
இதுக்கே இப்படி ட்ரோல் செய்தால், இப்படத்தின் டிரைலரை துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா மற்றும் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கம் ஆகிய இடங்களில் திரையிட உள்ளார்களாம். வருகிற டிசம்பர் 31-ந் தேதி டிரைலர் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது என்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
இதையும் படியுங்கள்... கனவு நிஜமாகி விட்டது... தளபதியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து பூரித்து போன செம்பருத்தி ஷபானா!