சித்ரா மரணம் குறித்து வனிதா போட்ட பதிவு... திட்டி தீர்த்த ரசிகர்களால் திட்டத்தை மாற்றி எஸ்கேப்...!
விஜே சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அவருடைய ரசிகர்களிடம் பிக்பாஸ் வனிதா ஏகப்பட்ட விமர்சனங்களை வாங்கியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் விஜே சித்ரா. டந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து நசரத் பேட்டை பொலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரை பதிவு திருமணம் செய்து கொண்ட ஹேமந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.
சித்ராவாக மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் முல்லையாக வாழ்த்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட சித்ரா கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நடிக்க வைக்க வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வனிதா தனது யூ-டியூப் பக்கத்தில் சித்ராவின் மறைவு குறித்து சிறப்பு கேள்வி, பதில் நிகழ்ச்சி ஒன்றை நேற்று மாலை 4 மணிக்கு லைவ்வில் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார். அதுகுறித்த அறிவிப்பில் வனிதா மற்றும் அவருடைய வழக்கறிஞரான ஸ்ரீதரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
வனிதாவின் இந்த அறிவிப்பால் கடுப்பான சித்ராவின் ரசிகர்கள் சரமாரியாக திட்டி தீர்க்க ஆரம்பித்தனர். அடுத்தவர்களின் மரணத்தை வைத்து காசு சம்பாதிக்க பார்க்குறீங்களா? என தாறுமாறாக விமர்சனங்கள் எழுந்தது.
இதனால் சுதாரித்துக் கொண்ட வனிதா முதலில் நேரலையை 6 மணிக்கு நடத்துவதாக அறிவித்தார். அதன் பின்னர் அதைப் பற்றி மூச்சு கூட விடாத வனிதா, நேரலையில் வராதது மட்டுமின்றி, சித்ரா மரணம் குறித்து பேச உள்ளதாக வெளியிட்ட பதிவையே டெலிட் செய்துவிட்டார்.