முன்னாள் காதலன் கவினுக்கு திருமணம் ஆனதும்... லாஸ்லியா போட்ட சூசக பதிவு - என்ன இப்படி சொல்லிட்டாங்க!
கவினுக்கும் மோனிகா டேவிட்டுக்கும் திருமணம் ஆன நிலையில், அவரது முன்னாள் காதலி லாஸ்லியா போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ள கவின், அடுத்தடுத்து படங்களில் பிசியாகி வரும் நிலையில், திருமணமும் செய்துகொண்டுள்ளார். அவர் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை கரம்பிடித்துள்ளார். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கவினின் திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிலையில், கவினுக்கு திருமணம் ஆனதும் அவருடைய முன்னாள் காதலியான லாஸ்லியா போட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. கவினும், லாஸ்லியாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது காதலித்தது அனைவரும் அறிந்தது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட கவின் - லாஸ்லியா ஜோடி, அந்த சீசனில் உருகி உருகி காதலித்தனர்.
அந்த சீசனின் டிஆர்பி எகிற இவர்களது காதலும் ஒரு காரணமாக இருந்தது. பிக்பாஸ் முடிந்ததும் இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அந்த சமயத்தில் பேசப்பட்டது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு இவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இதையும் படியுங்கள்... வெறித்தனமாக டான்ஸ் ஆடிய தளபதி மகள்... திவ்யாவின் நடனத்தை பார்த்து பிரம்மித்துபோன விஜய் - வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரேக் அப் செய்து பிரிந்த கவினும் லாஸ்லியாவும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினர். இதில் கவின் சக்சஸ்புல் ஹீரோவாக வலம் வந்தாலும், லாஸ்லியா வெற்றிக்காக போராடி வருகிறார். இதனிடையே தான் லாஸ்லியாவின் தோழியான மோனிகா டேவிட் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் கவின்.
கவினின் திருமணத்தில் லாஸ்லியா கலந்துகொள்ளாவிட்டாலும், அவரின் திருமணம் முடிந்ததும் நடிகை லாஸ்லியா போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. அதன்படி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதில், “ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார். கவினின் திருமணத்தை தான் அவர் இவ்வாறு சூசகமாக விமர்சித்துள்ளதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
அதோடு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பியார் பிரேமா காதல் படத்தில் இடம்பெறும் ஹை ஆன் லவ் என்கிற பாடலை வைத்துள்ளார். இதனால் கவினின் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாகவே அவர் அந்த பாடலை வைத்திருக்கிறாரோ என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்... லாஸ் வேகாஸ் நகரில் மின்னும் ஜெயிலர்.. USA Box office கலெக்ஷன் என்ன? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!