லாஸ் வேகாஸ் நகரில் மின்னும் ஜெயிலர்.. USA Box office கலெக்ஷன் என்ன? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் பல வசூல் சாதனைகளை தொடர்ச்சியாக படைத்து வருகிறது. முதல் வாரத்தை கடந்து இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்து ஜெயிலர் திரைப்படம் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவருடைய இயக்கத்தில் வெளியான எல்லா திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
ஆனால் தளபதி நடிப்பில் இவர் இயக்கி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், விமர்சன ரீதியாக சில சறுக்கல்களை சந்தித்தது. இந்த நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்கும வாய்ப்பை பெற்றார் நெல்சன் திலீப் குமார் அவர்கள்.
21 வயது இளையவர்... இருந்தாலும் ரஜினி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்?
மீண்டும் தனது திறமையை நிரூபிக்க கிடைத்த ஒரு வாய்ப்பாக இது அமைந்த நிலையில், ஜெயிலர் திரைப்படத்தை பல இந்திய திரையுலக நடிகர்களை வைத்து இயக்க துவங்கினார். மலையாள திரை உலகின் மோகன்லால் அவர்கள் மற்றும் கன்னட திரையுலக நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி உள்ளிட்ட பல நடிகர்கள் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தனர்.
இதனையடுத்து இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி உலக அளவில் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. நேற்று வரை இந்த திரைப்படம் சுமார் 511 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்திருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்பொழுது வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வெற்றி கொண்டாட்டத்தின் வீடியோவை லாஸ் வேகாஸ் நகரில் உள்ள விளம்பர பதாகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்மீக பயணத்தை முடித்த ரஜினிகாந்த், கடந்த மூன்று நாட்களாக பல அரசியல் தலைவர்கள் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதம் இரண்டாம் வார வாக்கில் அவருடைய அடுத்த பட படப்பிடிப்புகள் துவங்கவுள்ளது.
ரித்திகாவுக்கு என்ன ஆச்சு! பாக்கியலட்சுமி சீரியலில் இனி அவருக்குப் பதில் இவர் தானா?