நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு வயதினருக்கும் பிடித்த நடிகராக இருக்கும் விஜய், தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது நடனம் தான். 50 வயதை எட்டிவிட்ட போதிலும் இன்றளவும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடனத்தில் பின்னி பெடலெடுத்து வருகிறார் தளபதி. அதற்கு சான்று லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடி பாடல் தான். அந்த பாடலில் விஜய் ஆடிய அசத்தலான டான்ஸ் தான் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் ஆக்கிரமித்து உள்ளன.

இதையும் படியுங்கள்... ரித்திகாவுக்கு என்ன ஆச்சு! பாக்கியலட்சுமி சீரியலில் இனி அவருக்குப் பதில் இவர் தானா?

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே தற்போது வெளிநாட்டில் படித்து வருகின்றனர். ஜேசன் சஞ்சய் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து வருவதோடு, அவ்வப்போது சில குறும்படங்களையும் இயக்கி அதனை யூடியூப்பில் வெளியிட்டு வருகிறார். மறுபுறம் திவ்யா சாஷாவும் படிப்பில் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா திருமண நிகழ்ச்சி ஒன்றில் வெறித்தனமாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் தனது மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா உடன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது திடீரென அங்கிருந்த நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து திவ்யா நடனமாடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. 

Scroll to load tweet…

மகளின் அசத்தலான நடனத்தை பார்த்து நடிகர் விஜய்யே பிரம்மித்துப் போகும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இது பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது தான் இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... லாஸ் வேகாஸ் நகரில் மின்னும் ஜெயிலர்.. USA Box office கலெக்‌ஷன் என்ன? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!