‘அமெரிக்க ஆவி’ படம் மூலம் மகன் தனுஷை தமிழ் சினிமாவில் களமிறக்கிய நெப்போலியன்...!
நடிகர் நெப்போலியனின் மகன்கள் தனுஷ் மற்று குணால் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் கூட்டணியில் உருவாகும் அமெரிக்க ஆவி படம் பற்றி பார்க்கலாம்.

Nepoleon Son Dhanoosh Debut in Tamil Cinema
1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நெப்போலியன். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்ற அவர், தன் மகன் தனுஷுக்காக சினிமா, அரசியல் இரண்டையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கு ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார் நெப்போலியன். கடந்த நான்கு ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த நெப்போலியன் தற்போது பேய் படம் ஒன்றின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார். அப்படம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நெப்போலியன் மகன்கள்
இதுகுறித்து இன்ஸ்டாவில் நெப்போலியன் போட்டுள்ள பதிவில், “உலகெங்கும் வாழும் எனது அன்பு நண்பர்களே... தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம்..! உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் புகழும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்து, அந்த படத்தை Jeevan Films என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களது மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர்.
அமெரிக்க ஆவி திரைப்படம்
அதற்கான கதை தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது . நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கினங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்..
இயக்கப்போவது யார்?
மேலும், இப்படம் அதிக பொருட்ச் செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017ம் ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில் நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது இருக்கிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற் கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

