- Home
- Cinema
- Beast Part 2 : என்னது பீஸ்ட் 2-ம் பாகம் வருதா? - புது குண்டை தூக்கிப்போட்ட நெல்சன்... ஓகே சொல்வாரா தளபதி?
Beast Part 2 : என்னது பீஸ்ட் 2-ம் பாகம் வருதா? - புது குண்டை தூக்கிப்போட்ட நெல்சன்... ஓகே சொல்வாரா தளபதி?
Beast Part 2 : பீஸ்ட் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இயக்குனர் நெல்சன் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நெல்சன், விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால், ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டார் நெல்சன்.
பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. நடிகர் விஜய்யின் கெரியரில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்த படமாகவும் பீஸ்ட் மாறியது. இப்படம் ரூ.100 கோடி வசூலை ஈஸியாக கடந்துவிட்டாலும், ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தால் தான் நஷ்டத்தில் இருந்து தப்பிக்கும் என கூறப்படுகிறது.
பீஸ்ட் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இயக்குனர் நெல்சன் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதன்படி பீஸ்ட் படத்தின் கதைக்களத்தில் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான அனைத்து அம்சங்களும் இருப்பதாக நெல்சன் கூறி உள்ளார்.
வழக்கமாக வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தான் எடுக்கப்படும். அப்படி இருக்கையில் முதல் பாகமே எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக நெல்சன் கூறி இருப்பது சற்று ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. இருப்பினும் இதற்கு விஜய் ஓகே சொல்வாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... sivakarthikeyan : பூர்வீக கிராமத்தில் அழகான புதுவீடு கட்டிய சிவகார்த்திகேயன்... வைரலாகும் போட்டோஸ்