Nayanthara broke Society Rules : பலமுறை சமூக கட்டுப்பாடுகளை உடைத்த நயன்தாரா
தற்போது வாடகைத்தாயின் மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி குழந்தை பெற்று இருப்பது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
nayanthara
விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி பெற்றோர்களான பிறகு பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர். சமூக ஊடகம் முழுவதும் இவர்களது பேச்சு தான் தற்போது. இந்த சூழலில் நயன்தாரா இதுவரை ஐந்து முறை சமூக கட்டுப்பாடுகளை உடைத்துள்ளார் என்கிற செய்தியும் பரவி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபல லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நயன்தாரா. பல காதல் தோல்விக்கு பின்னர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்.
முன்னதாக சிம்பு, பிரபு தேவா உள்ளிட்டோருடன் வெளிப்படையான காதல் உறவிலிருந்த நயன்தாரா பின்னர் அந்த உறவுகளை முறித்துக் கொண்டு தற்போது விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2003 ஆம் ஆண்டு மலையாள படம் மூலம் திரையுலகருக்கு அறிமுகமான நயன்தாரா இரண்டு தலைமுறை ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு... Trisha : விவாகரத்து தேவையில்லை...தனது திருமணம் குறித்து பளார் பதிலளித்த த்ரிஷா
Nayanthara Vignesh shivan wedding
மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்து விட்டார் நயன்தாரா. தற்போது பாலிவுட்டில் அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வரும் இவர், இறுதியாக இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் படம் வெளியானது. பின்னர் அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
Nayanthara Vignesh shivan wedding
முன்னதாக நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனருக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பல வருடங்கள் இருவரும் காதல் உறவில் இருந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் லிவிங் டு கெதர் என்பது சட்டபூர்வமாகப்படவில்லை. ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு... bb 6 rachitha mahalakshmi : பிக் பாஸ் ரக்ஷிதா குறித்து உணர்ச்சிகர பதிவிட்ட முன்னாள் கணவர் தினேஷ்
nayanthara
முன்பு பிரபுதேவாவை திருமணம் செய்யும் எண்ணத்தில் இருந்த லேடி சூப்பர் ஸ்டார் கடந்த 2011 ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பின்னர் 11 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படம் மூலம் மறுப்பிரவேசம் செய்தார். அப்போது இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டிருந்தது.
nayanthara
பின்னர் விக்கியுடன் காதல் மலர அதனை சமூகத்திற்கு சொல்லும் வகைகள் அவ்வப்போது சூட்டிங்கிற்கு லீவ் விட்டு விட்டு இருவரும் ஊர் சுற்றினர். இது குறித்தான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை பெற்று வந்தது.
nayanthara
தற்போது வாடகைத்தாயின் மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி குழந்தை பெற்று இருப்பது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவை பொறுத்த வரை வாடகை தாய் முறைக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது 'திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகி இருக்க வேண்டும். இருவரில் ஒருவருக்கு கட்டாயம் குழந்தை பெறும் தன்மை இருக்கக்கூடாது. முறையான சான்று பெற்றிருக்க வேண்டும். வாடகைத்தாய் ஒருமுறை மட்டுமே குழந்தை பெற்றிருக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது.
nayanthara
இந்நிலையில் திருமணமாகி நான்கே மாதங்களில் இவர்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகி இருப்பதும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. தன்னை சுற்றி எவ்வளவு கருத்துகள் நிலவி வந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கூட்டத்தில் ஒருவராக இல்லாமல் தனித்து நிற்கிறார் நயன்தாரா.