திருமணமான 6 மாதத்தில் தாலியை கழட்டிய நயன்! பட புரோமோஷனுக்கு வெறும் கழுத்தோடு வந்த லேடி சூப்பர்ஸ்டார்!
நடிகை நயன்தாரா திருமணமான 6 மாதத்திலேயே தாலியை கழட்டி வைத்து விட்டு, பல புரோமோஷன் பணிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' திரைப்படம், டிசம்பர் 22 ஆம் தேதி... வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் படு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
பொதுவாக தான் நடிக்கும் படங்களில் புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் நயன்தாரா, இந்த படத்தை தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிச்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளதால் பட புரோமோஷனில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
'வாரிசு' படத்தின் 3-ஆவது சிங்கிள் பாடலின் ப்ரோமோ வெளியானது..!
அந்த வகையில் நேற்று, 'கனெக்ட்' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, விஜய் டிவி தொகுப்பாளினி டிடியுடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்கள் வெளியானது. எளிமையான சேலையில் மிளிரும் அழகில் ஜொலித்த நயன்தாரா... கழுத்தில் தாலி கூட அணியாமல் பட விழாவில் கலந்து கொண்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
காரணம் திருமணத்திற்கு பின், நயன்தாரா தாலியை கழட்ட மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், 'ஜவான்' படத்தில் கூட, கழுத்தில் இருந்த தாலியை மறைக்கும் படி உள்ள உடைகளையே அணிந்து நடித்ததாக கூறப்பட்டது. அதே போல் ஹனி மூன் சென்றபோது... முதல் முறையாக குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் போன்றவற்றில் கழுத்தில் தாலி அணிந்திருந்தார்.
பிரபல காமெடி நடிகர் மனைவி தூக்கிட்டு தற்கொலை..! அதிர்ச்சியில் திரையுலகம்..!
ஆனால் நேற்று நடந்த பட புரொமோஷனில் நயன்தாரா எடுத்து கொண்ட புகைப்படங்களில் தாலி இல்லை என்பதை அறிந்து, நெட்டிசன்கள் பலர் தாலி செண்டிமெண்ட் பார்ப்பதாக வெளியான தகவல்கள் எல்லாம் சும்மாவா? என்பது போல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இன்றைய தினம், கனெக்ட் படத்தின் ப்ரீமியர் ஷோவிலும் நயன்தாரா மிகவும் ஸ்டைலிஷான உடையில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பார்த்த பிரபலங்கள் பலர், மாயா படத்தை தொடர்ந்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள இந்த படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்து வருகிறார்கள்.