MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாரா முதல் சமந்தா வரை... டாப் ஹீரோயினாக இருக்கும்போதே ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை குஜால் படுத்திய நடிகைகள்

நயன்தாரா முதல் சமந்தா வரை... டாப் ஹீரோயினாக இருக்கும்போதே ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை குஜால் படுத்திய நடிகைகள்

முன்னணி நடிகைகளாக இருக்கும் போதே ஐட்டம் சாங்கிற்கு ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகைகளைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 14 2023, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

இந்திய சினிமாவில் ‘ஐட்டம் சாங்’ என்கிற கான்சப்ட் பல வருடங்களாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஐட்டம் சாங் ஆடுவதற்கென பிரத்யேகமாக நடிகைகள் இருந்தார்கள். காலப்போக்கில் ஹீரோயின்களே அவ்வாறு ஆடத்தொடங்கினர். கமர்ஷியல் படத்தில் அனைத்து அம்சங்களும் இருந்தாலும், ஐட்டம் சாங் இல்லையென்றால் அப்படம் விலைபோகாது என்கிற நிலைமை தான் இன்றளவும் உள்ளது. சினிமாவில் கிளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் ரசிகர்களுக்கு பெப் ஏற்றும் விதமாக ஐட்டம் சாங் வைப்பது இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி முன்னணி நடிகையாக இருந்தும் ஐட்டம் சாங்கிற்கு ஆட்டம் போட்ட நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

நயன்தாரா

நடிகை நயன்தாரா, சமீபகாலமாக கவர்ச்சியை தவிர்த்து வந்தாலும், அவர் சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சி தூக்கலான வேடங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான சிவாஜி திரைப்படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் நயன், அடுத்தபடியாக விஜய்யுடன் சிவகாசி மற்றும் தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் லோக்கல் பாய்ஸ் பாடலில் தாவணியில் வந்து தர லோக்கலாக குத்தாட்டம் போட்டிருப்பார்.

38

சிம்ரன்

90-களில் கனவுக்கண்ணியாக வலம் வந்த நடிகை சிம்ரன், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயினாக உயர்ந்துவிட்டார். முன்னணி ஹீரோயின் ஆன பின்னர் கூட இவர் ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். அதன்படி யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்டா பூபதி பாடலுக்கு விஜய் உடன் சேர்ந்து சிம்ரன் ஆடிய நடனம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

48

கிரண்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கிரண், ஹீரோயினாக நடிக்கும்போதே விஜய், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி பாப்புலர் ஆனார். திருமலை படத்தில் விஜய்யுடன் இவர் ஆடிய வாடியம்மா ஜக்கம்மா பாடல் வேறலெவல் ஹிட் அடித்தது.

58

தமன்னா

ரசிகர்களால் மில்க் பியூட்டி என அழைக்கப்படுபவர் தமன்னா. தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களிலேயே தாராளமாக கவர்ச்சி காட்டி நடிக்கும் இவர், முன்னணி நடிகர்களின் படங்களில் ஐட்டம் டான்ஸும் ஆடி உள்ளார். அதன்படி யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடிய தமன்னா, தெலுங்கிலும் இதேபோன்று பல்வேறு படங்களில் ஆடி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ஆதிபுருஷ் முதல் பொம்மை வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா? முழு லிஸ்ட் இதோ

68

சமந்தா

ஐட்டம் டான்ஸ் ஆடிய முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் லேட்டாக இணைந்தாலும், லேட்டஸ்ட் ஆக வந்திருப்பவர் தான் சமந்தா. புஷ்பா படத்தில் இடம்பெறும் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அல்லு அர்ஜுன் உடன் சேர்ந்து கவர்ச்சி ததும்ப நடிகை சமந்தா போட்ட குத்தாட்டம் அப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடித்தந்தது.

78

அஞ்சலி

தமிழில் எங்கேயும் எப்போதும், அங்காடித் தெரு போன்ற படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது கிளாமர் மோடுக்கு மாறி இருக்கிறார். இவர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.

88

சாயிஷா

வனமகன், கஜினிகாந்த், டெடி, காப்பான் என குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆன நடிகை சாயிஷா, நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் கர்ப்பமானதால் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து சாயிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, அவர் சிம்புவின் பத்து தல படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

இதையும் படியுங்கள்...  மீண்டும் கர்ப்பமா? சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்த காஜல் அகர்வால்..! - காரணம் என்ன?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
பூஜா ஹெக்டே
சிம்ரன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved