- Home
- Cinema
- தாய் பாசத்தில் நயனை அடிச்சுக்க ஆளே இல்ல... ஒரே ஒரு போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி..!
தாய் பாசத்தில் நயனை அடிச்சுக்க ஆளே இல்ல... ஒரே ஒரு போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி..!
நடிகை நயன்தாரா மகன்கள் மீது பாசமாக இல்லை என சர்ச்சை வெடித்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Nayanthara Controversy
சினிமாவில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகைகளில் நடிகை நயன்தாரா-வும் ஒருவர். காதல் தொடங்கி கல்யாணம் வரை அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. அதுபோதாதென்று, குழந்தையை பெற்றெடுத்ததிலும் சர்ச்சையில் சிக்கினார் நயன். கல்யாணம் ஆகி 4 மாதத்தில் இரட்டை குழந்தைக்கு அம்மா ஆனார் நயன்தாரா.
நயன்தாரா சர்ச்சை
பின்னர் தான் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. அவர் திருமணமாகி 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும், அது சட்டப்படி குற்றம் என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன. பின்னர் தான் தனக்கு 2019-ம் ஆண்டே ரிஜிஸ்டர் மேரேஜ் ஆன விஷயத்தை வெளியிட்டனர்.
மகன்கள் மீது பாசம்
நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றேடுத்தாலும் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். அவர்களுக்காக சில மாதங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் நயன். பின்னர் மகன்கள் ஓரளவுக்கு வளர்ந்ததும் மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கி உள்ளார் நயன்தாரா.
பாலிவுட்டில் நடிக்கும் நயன்
இதனிடையே அண்மையில் பாலிவுட் படமொன்றில் நடிக்க கமிட் ஆனார் நயன். இதற்கு முன்னர் அவர் நடித்த ஜவான் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். அப்படத்தை வாரிசு பட இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார்.
மகனின் கையை தட்டிவிட்டதால் சர்ச்சை
அப்படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகை நயன்தாரா மும்பை சென்றபோது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதில் நயன்தாரா தன் கையில் போனை பயன்படுத்திக் கொண்டே நடந்துவர, அப்போது அருகில் நடந்து வந்த அவரது மகன், நயன்தாராவின் கையை பிடிக்க, அவர் தட்டிவிட்டிருந்தார்.
வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
அதைப் பார்த்த நெட்டிசன்கள், நயன்தாராவுக்கு பிள்ளைகளை விட போன் தான் முக்கியமா போச்சு, அவருக்கு தாய் பாசமே இல்லை என்று சரமாரியாக கமெண்டுகளை போட்டு வறுத்தெடுத்தனர். இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நயன் ஒரு போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
போட்டோஷூட் மூலம் பதிலடி
அதில் கார்டன் ஏரியாவில் தன்னுடைய மகன்கள் உயிர் மற்றும் உலகு உடன் நயன்தாரா கொஞ்சி விளையாடியபோது எடுத்த கேண்டிட் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன. அந்த பதிவில், எங்களுக்கு கிடைத்த வரம் என தன் இரு மகன்களையும் குறிப்பிட்டு இருக்கிறார் நயன்தாரா.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இதைப்பார்த்த ரசிகர்கள், தாய்ப் பாசத்தில் தன்னை மிஞ்ச ஆளே இல்லை என நயன்தாரா இந்த போட்டோஷூட் மூலம் நிரூபித்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். தன் மகன்களே தனக்கு கிடைத்த வரம் என பதிவிட்டு தன்னைப்பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நயன்தாரா. நடிகை நயன்தாரா கைவசம் ஹாய் என்கிற படம் உள்ளது. அதில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

