சிரஞ்சீவிக்காக சம்பளத்தை அதிரடியாக குறைத்த நயன்தாரா - அதுக்குன்னு இவ்ளோ கம்மியா?
வெற்றிகரமான இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் மெகா 157 திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.

Nayanthara Salary For Mega 157
தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் அனில் ரவிபுடி. அவர் இயக்கத்தில் கடைசியாக பொங்கலுக்கு வெளிவந்த சங்கராந்திக்கு வஸ்துன்னாம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகும் மெகா 157 படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படக்குழு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா
அதன்படி இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை அனில் ரவிபுடி ஒரு வித்தியாசமான வீடியோ மூலம் வெளியிட்டார். வீடியோவில் நயன்தாரா தனது குழுவினருடன் தெலுங்கில் பேசுவதும், காரில் சிரஞ்சீவியின் பாடல்களைக் கேட்பதும், ஸ்கிரிப்ட் படிப்பதும், சிரஞ்சீவியின் வசனத்தைப் பேசுவதுமாகக் காட்டப்பட்டுள்ளது. இறுதியில் அனில் ரவிபுடி திரையில் தோன்றி நயன்தாரா படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்துகிறார்.
நயன்தாராவின் ஹாட்ரிக் கூட்டணி
சிரஞ்சீவி, நயன்தாரா இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன்னதாக சைரா நரசிம்ம ரெட்டி (2019), காட்ஃபாதர் (2022) ஆகிய படங்களில் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மெகா 157-ல் நயன்தாராவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நிற்கும் வகையில் இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படத்தின் விளம்பரத்தின் இறுதியில் சிரஞ்சீவியின் பிரபல வசனம் மூலம் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
நயன்தாரா சம்பளம்
ஷைன் ஸ்கிரீன்ஸ் சார்பில் சாஹு காரப்பட்டி தயாரிக்கும் இப்படத்திற்கு, கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சுஷ்மிதா கொனிடெலா இணை தயாரிப்பாளராக உள்ளார். இப்படத்திற்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்குமா என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக நயன்தாரா வாங்க உள்ள சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில் நடிக்க ரூ.18 கோடி சம்பளமாக கேட்டிருந்த நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் கேட்டதைவிட 66 சதவீதம் குறைவான தொகையை வழங்க டீல் பேசி உள்ளார்களாம். அதன்படி இப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரஞ்சீவிக்காக அவர் சம்பளத்தை குறைக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

