தியேட்டர் பிசினஸில் காலடி எடுத்து வைக்கும் நயன்தாரா..! சென்னையில் மல்டிபிளக்ஸ் கட்டும் லேடி சூப்பர்ஸ்டார்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, சென்னையில் உள்ள பிரபல தியேட்டரை விலைக்கு வாங்கி, அந்த இடத்தில் புதிதாக மல்டிபிளக்ஸ் கட்ட உள்ளாராம்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் அங்கம் வகித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள நயன்தாரா, அதன் மூலம் வரும் வருமானத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். இதன்மூலம் நடிகையாக மட்டுமின்றி, தொழிலதிபராகவும் ஜொலித்து வருகிறார் நயன்தாரா.
நடிகை நயன்தாரா, தன் காதல் கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி முன்னணி டீ நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக இருந்து வரும் நயன்தாரா. லிப்பாம் என்கிற அழகு சாதன பொருள் தயாரிப்பு நிறுவனத்தையும் சொந்தமாக நடத்தி வருகிறார். இதுதவிர ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்திருக்கிறாராம்.
இதையும் படியுங்கள்... கருப்பு தாவணியில் கண்ணை கட்டும் அழகில் ரம்யா பாண்டியன்! முந்தானையை பறக்க விட்டு மூச்சு முட்ட வைத்த போட்டோஸ்!
இப்படி ஏராளமான பிசினஸ் செய்து வரும் நயன்தாரா, தற்போது தியேட்டர் பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வட சென்னை பகுதியில் இயங்கிவந்த பழமையான அகஸ்தியா தியேட்டரை நயன்தாரா சொந்தமாக வாங்கி உள்ளதாகவும், அந்த இடத்தில் புதிதாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்ட நயன்தாரா திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம்.
சென்னையின் ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் வட சென்னை பகுதியில் நயன்தாரா, தியேட்டர் கட்ட முடிவெடுத்துள்ளது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. நடிகை நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் என்கிற இந்தி திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... 'ஆதிபுருஷ்' படத்தில் 30 பாடகர்கள் இணைந்து பாடி.. மெய் சிலிக்க வைக்கும் ஜெய் ஸ்ரீராம் பாடல் வெளியானது!