2025 புத்தாண்டை நடிகரின் குடும்பத்தோடு கொண்டாட வெளிநாடு பறந்த நயன் - விக்கி! வைரலாகும் புகைப்படம்!
நடிகை நயன்தாரா, 2025-ஆம் ஆண்டு புத்தாண்டை பிரபல நடிகரின் குடும்பத்துடன் துபாயில் கொண்டாட உள்ள புகைப்படங்கள், தற்போது வெளியாகி உள்ளது.
Nayanthara Controversy
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர். சமீபத்தில் இவருக்கும், தனுஷுக்கும் முட்டிக்கொண்ட பிரச்சனை தமிழ் திரை உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபலங்கள் சிலர் தனுஷுக்கு எதிராக திரும்பி, நயன்தாராவுக்கு சப்போர்ட் செய்த நிலையில் மற்றொரு தரப்பினர் நயன்தாராவுக்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்ததை பார்க்க முடிந்தது.
Nayanthara Up coming Movies
இந்த பிரச்சனை தற்போது தணிந்து, தன்னுடைய பட வேலைகளில் நயன்தாரா கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இந்தாண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக அவரது 75வது திரைப்படமான 'அன்னபூரணி' வெளியான நிலையில், அடுத்தாண்டு நயன்தாராவின் ஆண்டாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. காரணம் சுமார் 8 படங்கள் இவரின் கைவசம் உள்ளது. அதில் டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 ஆகிய படங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
'பேபி ஜான்' படத்தில் கீர்த்திக்கு சிபாரிசு செய்தது இந்த டாப் ஹீரோயினா? அவரே பகிர்ந்த சீக்ரெட்!
Nayanthara Movie List
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் நடித்துவரும் 'டியஸ் ஸ்டூடண்ட்ஸ்' மற்றும் கன்னடத்தில் நடிகர் யாஷ்க்கு அக்காவாக நடித்தவரும் 'டாக்ஸிக்' ஆகிய படங்கள் படப்பிடிப்பில் உள்ளது. இதை தவிர தமிழில் இன்னும் பெயரிடாத திரைப்படம், மற்றும் ராக்காயி, MMMN ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானாலும், இதுவரை நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறாரா என்கிற தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
LIK movie Produced Nayanthara
ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் அடுத்தடுத்து சில புதிய தொழில்களிலும் தன்னை நயன்தாரா ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அதேபோல் தன்னுடைய கணவர் இயக்கும், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தையும் நயன்தாரா தன்னுடைய ரவுடி பிச்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.
சுவாசிகா முதல் திவ்யா துரைசாமி வரை! 2024-ல் ரசிகர்களை இம்பிரஸ் பண்ணிய 6 பிரபலங்கள்!
Nayanthara New Year Celebration
எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும், கணவர் மற்றும் குழந்தைகளுடன் அடிக்கடி வெளிநாட்டுக்கு பறந்து போய் தன்னுடைய விடுமுறையை என்ஜாய் செய்து வரும் நயன், இந்த ஆண்டு புத்தாண்டை பிரபல நடிகரின் குடும்பத்தோடு இணைந்து வரவேற்க உள்ளார். இதுகுறித்த புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் மாதவன் மற்றும் அவருடைய மனைவியுடன், போட்டில் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு நயன்தாரா துபாயில் கொண்டாட உள்ளார். மாதவன் மற்றும் நயன்தாரா இருவரும் டெஸ்ட் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.