MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சுவாசிகா முதல் திவ்யா துரைசாமி வரை! 2024-ல் ரசிகர்களை இம்பிரஸ் பண்ணிய 6 பிரபலங்கள்!

சுவாசிகா முதல் திவ்யா துரைசாமி வரை! 2024-ல் ரசிகர்களை இம்பிரஸ் பண்ணிய 6 பிரபலங்கள்!

2024 ஆம் ஆண்டில், ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய எதார்த்தமான நடிப்பால், ரசிகர்களை இம்பிரஸ் செய்த நிலையில், அவர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

3 Min read
manimegalai a
Published : Dec 31 2024, 02:03 PM IST| Updated : Dec 31 2024, 02:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sir Gouri Priya Lover Movie

Sir Gouri Priya - Lover Movie

லவ்வர் - ஸ்ரீ கௌரி ப்ரியா:

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் 'லவ்வர்'. அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில், நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருந்தார். மணிகண்டன் ஏற்கனவே தன்னுடைய பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில், லவ்வர் திரைப்படத்தின் மூலம் ஸ்ரீ கௌரி பிரியாவின் நடிப்பு ரசிகர்களை அதிகம் இன்ட்ரஸ் செய்தது. முதல் படத்திலேயே இவரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி தள்ளினர்.

26
Preethi Mukundhan - Star Movie

Preethi Mukundhan - Star Movie

ஸ்டார் - ப்ரீத்தி முகுந்தன்

தெலுங்கில் இந்த ஆண்டு வெளியான 'உம் பீம் புஷ்' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ப்ரீத்தி முகுந்தன், இதை தொடர்ந்து கவின் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  ப்ரீத்தி முகுந்தனின் அழகும், அவருடைய எதார்த்தமான நடிப்பும் இந்த ஆண்டு அதிக ரசிகர்களை கவனிக்க வைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் ப்ரீத்தி. தமிழிலும் இவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

'பேபி ஜான்' படத்தில் கீர்த்திக்கு சுவாரிசு செய்தது இந்த டாப் ஹீரோயினா? அவரே பகிர்ந்த சீக்ரெட்!

 

36
Swasika - Lubber Pandhu

Swasika - Lubber Pandhu

லப்பர் பந்து - சுவாசிகா:

தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'வைகை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாசிகா. இதைத் தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகளும் வெற்றியும் கிடைக்காத நிலையில், மலையாள திரை உலகில் நுழைந்து தற்போது கலக்கி வருகிறார். கேரக்டர் ஆர்டிஸ்டாக ஆக நடித்தாலும் இவருடைய நடிப்புக்கு கேரளாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான 'லப்பர் பந்து' திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ்க்கு ஜோடியாக யசோதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்த இவர், தமிழ் ரசிகர்களையும் இந்த ஆண்டு இம்பிரஸ் செய்துள்ளார். சுவாசிக்கா தற்போது சூர்யாவின் 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

46
Divya Duraisamy - Vaazhai

Divya Duraisamy - Vaazhai

வாழை - திவ்யா துரைசாமி:

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் வாழை. ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 40 கோடி வரை வசூல் செய்த இந்த படத்தில், வேம்பு என்கிற கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் திவ்யா துரைசாமி . ஒரு செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் களமிறங்கி, பின்னர் திரைப்படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக நடித்த தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளார். இந்த திரைப்படம் திவ்யா துரைசாமிக்கு, திரை உலகில் மிகப்பெரிய சிறப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

விஜே சித்ரா தந்தையின் மரணத்திற்கு காரணம் இதுவா? மறைக்கப்பட்ட உண்மை; பறிபோன உயிர்!

56
Abyuktha - Goat Movie

Abyuktha - Goat Movie

 கோட் - அபியுக்தா:

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்).  விஜய் இரட்டை வேடத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஏஜிஎஸ்  நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். மீனாட்சி சவுத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இப்படத்தில் விஜயின் மகளாக நடித்திருந்தவர் அபியுக்தா மணிகண்டன். தன்னுடைய முதல் படத்திலேயே விஜய்க்கு மகளாக நடித்ததால், அதிகம் இம்பிரஸ் செய்த நடிகைகள் லிஸ்டில் இவரும் ஒருவராக மாறி உள்ளார்.

66
Pari Elavazhagan - Jama

Pari Elavazhagan - Jama

ஜாமா - பாரி இளவழகன்:

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான லோ பட்ஜெட் திரைப்படங்களில் ஒன்று ஜாமா. கூத்து கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தை, பாரி இளவழகன் இயக்கி நடித்திருந்தார். அம்மு அபிராமி இவருக்கு ஜோடியாக நடிக்க, சேத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கூத்து கலைஞர்கள் இடையே நடக்கும் அரசியலை வெளிச்சம் போட்டு காட்டிய, இந்த திரைப்படத்தில் பாரி இளவழகனின் இயக்கம் மட்டும் அல்ல நடிப்பும் அதிகம் கவனிக்கப்பட்டது.  வசூல் ரீதியாக பெரிய லாபத்தை ஈட்டவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று, OTT-யில் ட்ரெண்டிங்கில் இருந்தது இப்படம்.

241 படங்களில் 223 படங்கள் தோல்வி; 2024-ல் தமிழ் சினிமாவுக்கு இத்தனை கோடி நஷ்டமா?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved