MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜே சித்ரா தந்தையின் மரணத்திற்கு காரணம் இதுவா? மறைக்கப்பட்ட உண்மை; பறிபோன உயிர்!

விஜே சித்ரா தந்தையின் மரணத்திற்கு காரணம் இதுவா? மறைக்கப்பட்ட உண்மை; பறிபோன உயிர்!

மறைந்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Dec 31 2024, 11:20 AM IST| Updated : Dec 31 2024, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Store Serial Actress

Pandian Store Serial Actress

பாண்டியன் ஸ்டோர், சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இளம் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்டவர் வி ஜே சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில், தன்னுடைய காதல் கணவர் ஹேம்நாத்துடன்  தங்கி இருந்தபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

25
Vj Chitra Shocking Death

Vj Chitra Shocking Death

பின்னர் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சித்ரா பெற்றோரின் முயற்சியால் மத்திய குற்ற பிரிவு போலீசார் வசம் இந்த வழக்கு சென்றது. அதேபோல் நசரத்பேட்டை போலீசார், சித்ராவின் வழக்கு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் "சித்ரா மீது அவருடைய கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டது தான், இந்த தற்கொலைக்கு காரணம் என்பது போல் கூறப்பட்டிருந்தது. அதேபோல் சித்ராவின் தோழிகள் பலர் அடுத்தடுத்து ஹேம்நாத் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சீரியல் நடிகை சரண்யா அவர் தற்கொலை செய்வதற்கு முன்தினம் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது, எப்போதும் ஜாலியாக இருக்கும் சித்ரா அன்றைய தினம் மிகவும் படபடப்புடன் இருந்ததாக கூறியிருந்தார்.

மகளின் துப்பட்டாவிலேயே பிரிந்த உயிர்; மறைந்த நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை

35
Rohit Allegation About Hemnath

Rohit Allegation About Hemnath

மேலும் ஹேமாத்தின் நண்பர், ரோஹித் என்பவரும் ஹேமந்த் சித்ராவை பலமுறை அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ராவுக்கு பல கொடுமைகள் நடந்ததாக கூறப்பட்டாலும், சித்ராவின் தற்கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பலமுறை இவருடைய ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. சித்ராவின் பெற்றோரும், தன்னுடைய மகளின் மரணத்திற்கு காரணம் ஹேம்நாத் தான் என தொடர்ந்து நீதிமன்றத்தில், ஹேம்நாத்துக்கு தண்டனை வாங்கி கொடுக்க போராடி வந்தனர். சித்ரா மரணம் தொடர்பாக சுமார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீசாரும் இது தற்கொலையா அல்லது கொலையா என்கிற கோணத்தில் பரபரப்பாக விசாரணை செய்து வந்தனர். 

45
Vj Chitra Husband Released in August Month

Vj Chitra Husband Released in August Month

சித்ரா - ஹேம்நாத் சம்பந்தப்பட்ட வழக்கு கடந்த மூன்று வருடமாக, மகளிர் மகிலா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி, சித்ரா கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும், சாட்சியோ, முகத்திரமோ இல்லை என்பதை சுட்டிக்காட்டி இவருடைய வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் உட்பட ஏழு பேரை விடுதலை செய்வதாக அறிவித்தார். ஆகஸ்ட் மாதம் ஹேம்நாத் உட்பட ஏழு பேர் அதிரடியாக விடுதலை செய்யப்பட்டது தான் சித்ராவின் தந்தையை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.

இதெல்லாம் இங்க வேண்டாம்; ஜாக்குலினிடம் சுயரூபத்தை காட்டிய சவுந்தர்யா!

55
VJ Chitra Father Suicide

VJ Chitra Father Suicide

ஒரு ரிட்டயர்டு போலீஸ் அதிகாரியாக இருந்தும், தன்னுடைய மகளின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவரை தண்டிக்க முடியவில்லை என தினம் தோறும் நொந்து கொண்டிருந்த சித்ராவின் தந்தை காமராஜ், இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தற்போது போலீசார் சித்ராவின் தந்தை காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இவரின் தற்கொலை குறித்து குடும்பத்தினரிடம் தெடர்ந்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சில உண்மைகள் ஆதாரம் இல்லாமல் போனது தான். இவரின் உயிர் பறிபோக முக்கிய காரணம் என குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved