இதெல்லாம் இங்க வேண்டாம்; ஜாக்குலினிடம் சுயரூபத்தை காட்டிய சவுந்தர்யா!
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் உயிர்த்தோழிகளாக சுற்றி வந்த ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவுக்கு இடையே தற்போது புது பிரச்சனை எழுதுள்ளதை, தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
Bigg Boss Tamil season 8
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. போட்டியாளர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள நினைக்கும் நிலையில், சௌந்தர்யா, ஜாக்குலின் நட்பு தன்னுடைய விளையாட்டை பாதிப்பதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என வி ஜே விஷாலிடம் கூறும் புரோமோ தான், இப்போது வெளியாகி உள்ளது.
Soundarya Refused Friendship
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை எதுவுமே நிரந்தரம் இல்லை என கூறலாம். காதல் முதல் நட்பு வரை இதுவரை நிலையானதாக இருந்தது இல்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் உயிருக்கு உயிராக இருந்த காதலர்கள் கூட, வெளியே சென்றதும் பிரிந்து விடுகிறார்கள். அதற்கு மிகப்பெரிய உதாரணம் கவின் - லாஸ்லயா, நிக்சன் - ஐஸ்வர்யா, ரவீனா - மணி சந்திரா என பலரை சொல்லலாம். அதேசமயம் எதிர்பாராத சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் காதலர்களாக மாறி உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு ஜோடி தான் பாவனி மற்றும் அமீர்.
Breaking: தளபதி விஜயின் வலது கை; தவெக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அதிரடி கைது!
VJ Vishal and Soundharya Speech
காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் பிக் பாஸ் வீட்டில் இதே விதி தான் உள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் தங்களுடைய நட்பை பரிமாறிக் கொள்ளும் போட்டியாளர்கள், வெளியே சென்ற பில் சில வாரங்கள் ஒன்றாக சுற்றினாலும், பின்னர் அவரவர் அவர்களின் வேலையை பார்க்க துவங்கி விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நகமும் சதையும் போல் நட்பாக சுற்றி கொண்டிருந்த போட்டியாளர் தான் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா.
Jacquline
ஜாக்குலின் நட்பு ஏதோ ஒரு வகையில், சௌந்தர்யாவின் விளையாட்டை பாதித்த நிலையில், விஜே விஷாலிடம் இதுகுறித்து பேசிக் கொண்டிருக்கிறார் சௌந்தர்யா. அதாவது "நான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல வருஷம் வெயிட் பண்ணி வந்திருக்கிறேன். அப்போது நான் எனக்காக தானே விளையாட வேண்டும். புனிதமான ஒரு பிரண்ட்ஷிப்பை காட்டுவது எப்படி சரியாக இருக்கும்?
நான் அப்படி செஞ்சது உண்மை தான் ஆனால்; மாமிதா பைஜூவை அடித்த விவாகரம்! பாலா கூறிய விளக்கம்!
Bigg Boss latest promo
ஜாக்குலின் நட்பு என்னை பாதிக்கிறது. இதனால் மீண்டும் நான் கீழே விழ விரும்பவில்லை. அவரைப் பொறுத்தவரை, நட்புக்காக நிற்க வேண்டும் என நினைக்கிறார். என்னுடைய நட்பை நான் வெளிப்படுத்த போய், என்னுடைய விளையாட்டை நான் விட்டுக் கொடுத்து விடுவேன். அது எனக்காக ஆடுவது போல் இருக்காது என தன்னுடைய சுய ரூபத்தை காட்டி உள்ளார். எனினும் பிக்பாஸ் ரசிகர்கள் பலர் ஜாக்குலின் நட்பை எதிர்பார்ப்பது தவறு இல்லை... அதே நேரம் சவுண்டு சொல்வதும் வாஸ்தவம் தானே என கூறி வருகின்றனர்.