சமந்தா நடிக்க மறுத்த வாய்ப்பை... ஓகே சொல்லி தட்டி தூக்கிய நயன்தாரா..!
நடிகை சமந்தா நடிக்க மறுத்த, வாய்ப்பில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக பாலிவுட் நடிகைகள் பலர், திரைப்படங்களை தொடர்ந்து வெப் சீரீஸில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போது அடுத்தடுத்து பல தமிழ் நடிகைகளும் வெப் தொடரை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள் என்பது நாம் அறிந்தது தான்.
அந்த வகையில், ஏற்கனவே நடிகை சமந்தா, ப்ரியாமணி, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நாயகிகள் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வெப் தொடரின் கதைகளை தேர்வு செய்து நடித்து அசத்தி இருந்தனர்.
இவர்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாராவும் பிரமாண்ட வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
அதாவது, இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி, உலக சினிமாவையே தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, 'பாகுபலி' படத்தின் அடுத்த பாகத்தில் தான் நயன்தாரா நடிக்க உள்ளார்.
'பாகுபலி' முதல் பாகத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸில் ஓடிடிக்காக உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
Nayanthara
இந்த தொடர் வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த வெப்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
Samantha
இந்த வெப் தொடரில் நாயகியாக நடிக்க முதலில் நடிகை சமந்தாவை தான் அணுகியுள்ளதாம் படக்குழு. ஆனால் அவர் இந்த வாய்ப்பை ஒரு சில காரணங்களால் ஏற்க மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து நயன்தாராவிடம் இந்த கதையை கூறியதுமே அவர் ஓகே சொல்லி இந்த வாய்ப்பை தட்டி தூக்கி விட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.