நயன்தாரா முகத்தில் ஏன் இப்படியொரு சோகம்?.... வைரல் புகைப்படங்களால் குழப்பத்தில் ரசிகர்கள்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் அனைத்து படங்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இவர் நடித்து முடித்துள்ள மலையாள திரைப்படம் 'நிழல்' அடுத்தமாதம் வெளியாக உள்ளது இந்த படத்தில் நயன்தாரா சோகத்துடன் பல காட்சிகளில் நடித்துள்ளார் இது குறித்த புகைப்படங்கள் இதோ...
தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த', காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் 'நெற்றிக்கண்' என பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர், மலையாளத்தில் நடித்துள்ள 'நிழல்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், ஏப்ரல் 2 ஆவது வாரம் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின், ட்ரைலர் ஒரு சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில்... இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் 6 வயது சிறுவனுக்கு அம்மாவாகவும் நயன்தாரா நடித்துள்ளார்.
மிஸ்ட்ரி த்ரில்லர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தான் பல காட்சிகள் அமைந்துள்ளது.
ட்ரைலரின் பல காட்சிகளில் நயன்தாரா சோகமாகவே உள்ளார்.
எனவே படம் முழுவதும் நயன்தாரா தன்னுடைய மகனுடன் சேர்ந்து போராட்டங்களை சந்திப்பது தான் இந்த கதையா என ரசிகர்களையே குழம்ப வைத்துள்ளது.
பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை தேசிய விருது பெற்ற எடிட்டர் அப்பு என்.பட்டாதிரி இயக்கியுள்ளார்.
பல திகிலூட்டும் காட்சிகள் இந்த ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது
சோகமாகவே நடித்திருந்தாலும் அழகில் மட்டும் குறையாமல் உள்ளார் நயன்தாரா
செம்ம ஸ்டைலிஷாக அமர்ந்து ஹீரோவுடன் பேசும் காட்சி
ட்ரைலரில் உள்ள அனைத்து காட்சிகளும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.