அகாண்டா 2 படத்தின் டிக்கெட்டை ரூ.2 லட்சத்திற்கு வாங்கிய ரசிகர்!
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் அகாண்டா 2 படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிக்கெட்டை ரசிகர் ஒருவர் ரூ.2 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.

அகாண்டா 2 டிசம்பர் 5 ரிலீஸ்
தெலுங்கு சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க கூடிய படம் என்றால் அது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் அகாண்டா 2 தான். அகாண்டா படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 2ஆம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் போயபதி ஸ்ரீனு. கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இரட்டை வேடங்களில் நந்தமுரி பாலகிருஷ்ணா
இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா அகாண்டா மற்றும் முரளி கிருஷ்ணா என்று இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, கபீர் துகான் சிங், ரவி மரியா, பூர்ணா ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ரூ.200 கோடி பட்ஜெட்
பாலகிருஷ்ணா, போயபதி கூட்டணியில் இது நான்காவது படம். இதற்கு முன் இவர்களது கூட்டணியில் சிம்ஹா, லெஜண்ட், அகண்டா படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. ஆதலால் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவின் கெட்டப் ஆக்ரோஷமாக உள்ளது. சிவபக்தி தொடர்பான அம்சங்கள் அதிகமாக இருக்கும்.
அகாண்டா 2 படத்தின் டிக்கெட்
இந்த நிலையில் தான் இப்படத்தின் மீதான ஆர்வத்தால், அகண்டா 2 படத்தின் டிக்கெட் ரூ. 2 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் இந்த டிக்கெட்டை இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியுள்ளார். ஃபிராங்க்பர்ட் நகரில் பாலகிருஷ்ணா ரசிகர் ஒருவர் அகண்டா 2 டிக்கெட்டை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளார். ஆனால், அந்த ரசிகரின் முழு விவரங்கள் வெளியாகவில்லை. அகண்டா 2 படத்தின் வசூல் இலக்கும் மிக அதிகமாக உள்ளது.
டிசம்பர் 5 ரிலீஸ்
வரும் டிசம்பர் 5ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு நடிகர் ஆதி வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.