தேர்தல் ட்ரெண்டிங்கில் நமீதா... தமிழில் பேசி... தளபதி பாடலுக்கு ஆட்டம் போட்டு வாக்கு சேகரிப்பு! போட்டோஸ்
பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வரும் நமீதா, தற்போது பாஜக கட்சியில் போட்டியிடும், வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை , மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தாலும் காலம் முழுவதும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பிடிக்கும் அதிர்ஷடம் சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைக்கும். அப்படி கோலிவுட்டையே தன்னுடைய அதிரடி கவர்ச்சியால் ஆட்டிவைத்து, மச்சான்ஸ் என்ற ஒற்றை வார்த்தையால் ரசிகர்களின் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகை நமீதா.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கையோடு தன்னுடன் மியாவ் படத்தில் நடித்தவரும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான வீராவை திருமணம் செய்து கொண்ட இவர், சில படங்களில் நடித்து வரும் நிலையில், அரசியலிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வரும் நமீதா, தற்போது பாஜக கட்சியில் போட்டியிடும், வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை , மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கொஞ்சும் தமிழில்... ரசிகர்களுக்காக தமிழிலும் நமீதா பிரச்சாரம் செய்வது ஹை லைட்.
நமீதாவை பார்ப்பதற்காகவே, பலர் ஆர்வமுடன் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மற்ற நட்சத்திர பேச்சாளர்கள் போல் இல்லாமல், சற்று வித்தியாசமாக களத்தில் இறங்கி டான்ஸிலும் கலக்கி வருகிறார் நமீதா.
அந்த வகையில் இவர் தளபதியின், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங் பாடலுக்கு' டான்ஸ் ஆடியது... படு வைரலாக மாறியது குறிப்பிடத்தக்கது.