MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’யில் நாக சைதன்யா... மாஸான டைட்டில் உடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’யில் நாக சைதன்யா... மாஸான டைட்டில் உடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

நடிகர் நாக சைதன்யாவின் பிறந்தநாளான இன்று அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Nov 23 2022, 11:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றிகண்ட இவர், சரோஜா, மங்காத்தா, கோவா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான மாநாடு மற்றும் மன்மத லீலை ஆகிய திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதையடுத்து நாக சைதன்யாவை ஹீரோவாக வைத்து படம் இயக்க உள்ளதாக அறிவித்தார் வெங்கட் பிரபு. அப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நடிகர் நாகசைதன்யாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... திருமண கொண்டாட்டத்தில் பிசியான ஹன்சிகா... வருங்கால கணவருடன் காத்துவாக்குல காதல் செய்யும் போட்டோஸ் வைரல்

34

அதன்படி இப்படத்திற்கு கஸ்டடி என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் நடிகர் நாக சைதன்யாவை போலீஸ் கஸ்டடியில் பிடித்து வைத்திருப்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. இப்படத்தில் நாக சைதன்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளது இந்த போஸ்டரின் மூலம் தெரியவந்துள்ளது.

44

கஸ்டடி படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, சம்பத் குமார், சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் மாமனிதன் படத்திற்கு இணைந்து இசையமைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வாரிசு நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்... திருமணம் எப்போது தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நாக சைதன்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
"டாஸ்மாக் நேரத்தை நீட்டிச்சு, ஒயின் ஷாப்புகளை அதிகமாக்குங்கள்" - வினோத கோரிக்கை வைத்த பிரபல நடிகர்!
Recommended image2
Theatre and OTT Releases : நூறு சாமி முதல் எங்கள் தங்கம் வரை... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் லிஸ்ட் இதோ
Recommended image3
Rashmika : திருமணத்துக்கு பின் திடீரென பெயரை மாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved