MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மைனஸ் 12 டிகிரி குளிரில் லியோ ஷூட்டிங்... லோகேஷுக்கு அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்றதாக மிஷ்கின் நெகிழ்ச்சி

மைனஸ் 12 டிகிரி குளிரில் லியோ ஷூட்டிங்... லோகேஷுக்கு அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்றதாக மிஷ்கின் நெகிழ்ச்சி

லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பியுள்ள இயக்குனர் மிஷ்கின், அதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 27 2023, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ள மிஷ்கின், தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக இவருக்கு வில்லன் வேடங்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் மிஷ்கின் முதன்முதலில் வில்லனாக நடிக்க கமிட் ஆன படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

24

இதற்கு அடுத்தபடியாக அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் லியோ திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார் மிஷ்கின். இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தன்னுடைய காட்சிகள் அங்கு படமாக்கி முடிக்கப்பட்டதை அடுத்து தான் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பி உள்ளதாக தெரிவித்துள்ள மிஷ்கின், லியோ பட அனுபவங்களை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... சூடுபிடிக்கும் லியோ பட பிசினஸ்... இன்னும் ஷூட்டிங்கே முடியல அதற்குள் ரூ.400 கோடி வசூலை தட்டிதூக்கி சாதனை

34

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். உதவி இயக்குனர்களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.

44

என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... என்ன பிரச்சனை... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென விலகியது ஏன்? - லீக்கான தகவல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
லோகேஷ் கனகராஜ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Youth Review : முதல் படத்திலேயே சிக்சர் அடித்தாரா கென்? யூத் விமர்சனம் இதோ
Recommended image2
விவாகரத்து நோட்டீஸ் எதற்கு? சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு செக் வைக்கும் காதலன்
Recommended image3
விசாலாட்சியை பிரைன் வாஷ் பண்ணும் குணசேகரன்; தேவசகாயத்திற்கு தெரியவரும் உண்மை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved