MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நெப்போலியன் மகனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாதா? மயோபதி மருத்துவர் கொடுத்த விளக்கம்!

நெப்போலியன் மகனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாதா? மயோபதி மருத்துவர் கொடுத்த விளக்கம்!

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாது, அவரை பணத்துக்காக தான் அக்ஷயா என்கிற பெண் திருமணம் செய்து கொள்ள போகிறார் என பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் வட்டமிட்டு வரும் நிலையில், தற்போது இதற்கு மயோபதி மருத்துவமனையின் மருத்துவர்  டேனியல் விளக்கம் கொடுத்துள்ளார். 

3 Min read
manimegalai a
Published : Aug 03 2024, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Nepolean son Dhanoosh

Nepolean son Dhanoosh

தமிழ் சினிமாவில், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை அசர வைத்தவர் நெப்போலியன். அரசியலிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த இவரின் மூத்த மகன் தனுஷ், 4 வயதிலேயே அரிய வகை நோயான தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய மகனை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்.
 

29
Nepolean settled America

Nepolean settled America

தன்னுடைய மகனுக்காக சினிமா, அரசியல், என அனைத்தையும் ஓரம் கட்டி வைத்துவிட்டு அமெரிக்காவில் விவசாயம், ஐடி கம்பெனி ஆகியவற்றை நிர்வகித்து வரும் நெப்போலியன், தன்னுடைய மகன் தனுஷுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார்.

அழகில் மகளையே பீட் பண்ணும் அம்மு அபிராமியின் அம்மா! குடும்பத்தோடு இளையராஜாவை சந்தித்த புகைப்படம் வைரல்!
 

39
Dhanoosh Marriage:

Dhanoosh Marriage:

அதன்படி தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ள நெப்போலியன் அதற்காக பெண் தேடுதலிலும் கடந்த இரண்டு வருடமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருநெல்வேலியை சேர்ந்த உறவினர் பெண்ணான அக்ஷயா என்கிற பெண்ணுடன் தனுஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், நவம்பர் மாதம் அக்ஷயா - தனுஷின் திருமணம் ஜப்பானில் நடைபெற உள்ளது.

49
Dhanoosh Weds Akshaya

Dhanoosh Weds Akshaya

கடந்த மாதம் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம், வீடியோ கால் மூலம்  நடந்து முடிந்த நிலையில், நெப்போலியனை விமர்சிக்கும் விதமாக பல கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பரவின. குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் பாழாக்க உள்ளார் என்றும், அந்த பெண்ணும் நெப்போலியனின் பணத்திற்காக ஆசைப்பட்டு தான் அவருடைய மகனை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என செய்திகள் பரவின.

ஹெல்மென்ட் போடாமல் பேட்டி கொடுத்து Fine கட்டிய பிரஷாந்த்! செய்தியாளர் சந்திப்பில் கொடுத்த விளக்கம்!

59
Myopathy Doctor Daniel Interview

Myopathy Doctor Daniel Interview

இந்நிலையில் நெப்போலியன் திருநெல்வேலியில் கட்டியுள்ள மயோபதி மருத்துவமனையின் மருத்துவர் டேனியல், சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் நெப்போலியன் மகனுக்கு பெண் பார்க்கப்பட்டது எப்படி? தனுஷால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியுமா? என்பது குறித்தும் பேசி உள்ளார்.

69
nepolean Good Heart Person:

nepolean Good Heart Person:

நெப்போலியன் மயோபதி சிகிச்சை மூலம் தன்னுடைய மகனுக்கு முழுமையாக குணமடையாவிட்டாலும், இளம் வயதில் இந்த பிரச்சனை கண்டறியப்பட்ட சிறுவர்களுக்காக இந்த மையோபதி மருத்துவமனையை கட்டி உள்ளார். இதன் மூலம் பலர் பலனடைந்து வருகிறார்கள். வெளிநாட்டில் இருந்து இங்கு பலர் மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர். சிறு வயதிலேயே இந்த நோய் கண்டு பிடிக்கப்பட்டால்... அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை காலத்தை பொறுத்தே இந்த நோய் குணமடைகிறது என தெரிவித்தார்.

வயநாடு நிலச்சரிவால் கதறும் கேரள மக்களுக்கு ஓடி வந்து உதவிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

79
How To marriage Fix

How To marriage Fix

பின்னர் நெப்போலியன் மகன் குறித்து பேசியபோது, "நெப்போலியன் எங்களிடம் தங்களுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறினார். அப்போது நாங்கள் எங்களுக்கு தெரிந்த வட்டாரத்தில் பெண் விசாரிக்க தொடங்கினோம். பிரபல மெட்ரி மோனி தளத்திலும் பதிவு செய்து திருமணத்திற்கு வரன் தேடப்பட்டது. பின்னரே நெப்போலியனின் மாமா உறவு முறையில் இருக்கும் ஒருவரின் பெண்ணான அக்ஷயா பற்றி தெரிய வந்தது. ஏற்கனவே நெப்போலியனின் குடும்பமும் அக்ஷயாவின் குடும்பமும் தெரிந்தவர்கள்  என்பதால் அவர்கள் பரஸ்பரமாக பேசி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

89
Marriage Arrangements:

Marriage Arrangements:

மேலும் நெப்போலியனும் நேரடியாகவே வந்து தன்னுடைய மகன் பற்றி கூறி அக்ஷயாவிடம் பேசினார். அக்ஷயாவும் தனுசுடன் போனில் பேசி இருவருக்கும் திருமணத்தில் விருப்பம் இருந்ததால் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். அதே போல் அக்ஷயா  பணத்துக்காக திருமணம் செய்வதாக கூறப்படும் தகவலில் எந்த ஒரு உண்மையும் இல்லை.

அப்படியே அம்மா சாயிஷாவை உரித்து வைத்திருக்கும் ஆர்யா மகள் அரியானா! 3-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

99
Dhanoosh leading Normal life?

Dhanoosh leading Normal life?

மருத்துவரின் உரிய ஆலோசனைக்கு பின்னரே... தனுஷுக்கு பெண் பார்க்கப்பட்டது இது போன்ற தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் திருமணம் செய்ய முடியாது, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்பது உண்மை அல்ல. சிலர் திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர் என கூறி, டானியல் இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டியுள்ளார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved