MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உருகி உருகி காதலித்த இளையராஜாவுக்கு ‘நோ’ சொல்லிவிட்டு ஊரைவிட்டே ஓடிய காதலி... இசைஞானியின் ஒருதலைக் காதல்

உருகி உருகி காதலித்த இளையராஜாவுக்கு ‘நோ’ சொல்லிவிட்டு ஊரைவிட்டே ஓடிய காதலி... இசைஞானியின் ஒருதலைக் காதல்

இசைஞானி இளையராஜா உருகி உருகி காதலித்த பெண் அவரின் காதலை ஏற்க மறுத்தது ஏன் என்பது குறித்த பிளாஷ்பேக் ஸ்டோரியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 16 2023, 12:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இசையுலகின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. இவரது பாடல் பிடிக்காத ஆளே இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டுள்ளார் இளையராஜா. அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் பயணம், 40 ஆண்டுகளைக் கடந்து இன்று விடுதலை வரை நீடித்து வருகிறது. இசை மீதான தீராத காதலால், தற்போது 80 வயதை எட்ட உள்ள நிலையிலும் ஓய்வின்றி உழைத்து வருகிறார் இளையராஜா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இளையராஜாவைப் போல் அவரது வாரிசுகளும் இசையமைப்பாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். அதேபோல் அவரின் இளைய மகள் பவதாரணியும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இளையராஜாவின் மற்றொரு மகனான யுவன் சங்கர் ராஜா தனது பாடல்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். இளையராஜாவின் மனைவி ஜீவா கடந்த 2011-ம் ஆண்டே மரணமடைந்துவிட்டார்.  

35

இந்நிலையில், இளையராஜா ஜீவாவை திருமணம் செய்துகொள்ளும் முன் வீணா காயத்ரி என்பவரை ஒரு தலையாக காதலித்துள்ளார். அந்த லவ் ஸ்டோரியை பற்றி தற்போது பார்க்கலாம். இளையராஜா கடந்த 1970-ம் ஆண்டு வீணா காயத்ரி என்கிற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். வீணை வாசிப்பதில் சிறந்து விளங்கிய காயத்ரியை பாராட்டி அவரது திறமையை ஊக்குவிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு இசைத் துறையில் முக்கிய பொறுப்பையும் வழங்கினாராம்.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் செம்ம அடி வாங்கிய சமந்தாவின் சாகுந்தலம்... 2 நாளில் மொத்த கலெக்‌ஷனே இவ்வளவுதானா?

45

ஒரு தலையாக காதலித்து வந்த இளையராஜா, ஒருகட்டத்தில் அந்த பெண்ணிடம் சென்று தன் காதலை வெளிப்படையாகவே சொல்லிவிட்டாராம். இளையராஜாவின் காதலை ஏற்க மறுத்த வீணா காயத்ரி நோ சொல்லிவிட்டாராம். இருந்தும் மனம்தளராத இளையராஜா அந்தப் பெண்ணை உருகி உருகி காதலித்து வந்துள்ளார். ஆனால் மனம்மாறாத வீணா காயத்ரி, தன் சமூகத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம்.

55

ஒருதலைக் காதல், தோல்வியில் முடிந்ததை அடுத்து தான் சினிமாவில் அவருக்கு வெற்றிப்பாதை அமைந்திருக்கிறது. அந்த காதல் தோல்விக்கு பின் சினிமாவின் இசையமைக்க தொடங்கிய இளையராஜா, இன்று பல்வேறு காதல் ஜோடிகளை தன் இசையால் இணைத்து வருகிறார். இப்படி எக்கச்சக்கமான காதல் பாடல்களை கொடுத்த இளையராஜாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு நிறைவேறா காதலும் ஒளிந்து கிடக்கிறது.

இதையும் படியுங்கள்... ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பு அறிவிப்பு... இது 40 வருஷத்துக்கு முன் ரஜினி படத்துக்கு வச்ச பெயராச்சே..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Recommended image2
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி
Recommended image3
Net Worth: முதல்வர் விஜய்யை விட அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் ஷாரூக் கான்.. எவ்வளவு தெரியுமா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved