ஒரே ஒரு பாட்டுக்காக ஜெயிலுக்கு போன இசையமைப்பாளர் தேவா; அது என்ன பாட்டு தெரியுமா?
தேனிசை தென்றல் தேவா, ஒரு பாடலை கம்போஸ் செய்வதற்காக ஜெயிலுக்கு சென்ற சம்பவம் பற்றி அவரே பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அது என்ன பாட்டு என்பதை பார்க்கலாம்.

தேவா பாடல் ரகசியம்
கானா பாடல்கள் என்றாலே நம் அனைவருக்கும் மனதில் நினைவுக்கு வருவது தேவாவின் பெயர் தான். அவரால் தான் தமிழ்நாட்டில் கானா பாடல்களே பேமஸ் ஆகத் தொடங்கின. கானா பாடல்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் தேவா. அவர் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பதற்கு காரணம் அவரின் கானா பாடல்கள் தான். அப்படி ஒரு படத்திற்காக கானா பாடலை சிறைக் கைதியை பாட வைக்க முயற்சித்திருக்கிறார் தேவா. அதைப்பற்றி பார்க்கலாம்.
கானா பாடலுக்காக ஜெயிலுக்கு போன தேவா
பிரபுதேவா, ரோஜா நடிப்பில் வெளியான படம் இந்து. இப்படத்திற்கு தேவா தான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெறும் வா முனிமா பாடல் மிகவும் பிரபலமானது. இப்பாடலை மனோ தான் பாடி இருந்தார். ஆனால் மனோவுக்கு முன் இப்பாடலை பாட இருந்தது கானா பாடகர் பழனியப்பன் தானாம். அவரை பாட வைக்க தேடியபோது தான் அவர் செண்ட்ரல் ஜெயிலில் கைதியாக இருப்பது தேவாவுக்கு தெரியவந்திருக்கிறது. உடனே இயக்குனருடன் கிளம்பி ஜெயிலுக்கு சென்றிருக்கிறார் தேவா.
இதையும் படியுங்கள்... 800 ரூபாய்க்கு 10 பாட்டு; சீப் அண்ட் பெஸ்ட் இசையமைப்பாளராக வலம் வந்த தேவா!
கைதியை பாட வைக்க முயற்சி
அப்போது ஜெயிலரிடம் இதுபற்றி கூறியதும், அவர் தான் பாட அனுமதி அளிக்க தயார், ஆனால் நீங்கள் பாட அழைத்து செல்லும் போது அவர் தப்பிவிட்டால் பிரச்சனை ஆகிவிடும். அவர் கொலைக் குற்றம் செய்து தூக்கு தண்டனை கைதியாக இருக்கிறார். அதனால் அவர் தப்பிச் சென்றால் உங்களுக்கு தான் பிரச்சனை என சொல்லிய ஜெயிலர் இறுதியாக சொன்ன கண்டிஷனுக்கு தேவா ஒத்துக்கொள்ள வில்லையாம். பாடும் போது அவரது கையில் விலங்கு மாட்டிக் கொண்டு தான் பாடல் வேண்டும் என சொன்னாராம்.
வா முனிமா பாடல் ரகசியம்
ஒரு கலைஞனின் கையில் விலங்கு மாட்டிக் கொண்டு பாட வைக்க என்னால் அனுமதிக்க முடியாது என சொல்லி அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டாராம் தேவா. அதன்பின்னர் பாடகர் மனோவை பாட வைத்ததாக கூறினார் தேவா. மனோவின் குரலில் வெளியான அப்பாடல் இன்றளவும் பல இளசுகளின் வைப் பாடலாக இருந்து வருகிறது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு பாடலுக்காக தேவா இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறாரா என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ரஜினிகாந்துக்கு 10 நிமிடத்தில் தேவா போட்ட சூப்பர் ஹிட் பாட்டு! எது தெரியுமா?