குடிமகன்களுக்கு குட்நியூஸ்; விரைவில் தியேட்டர்களில் மது விற்பனை?
வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் திரையரங்குகளில் மது விற்பனை செய்ய அனுமதி கோரி உள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

PVR INOX has applied for liquor license : புதுப் படங்கள் பார்க்க வேண்டும் என்றால் தியேட்டருக்கு தான் செல்ல வேண்டும் என்கிற நிலை முன்பு இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே ஓடிடியில் புதுப் படங்களை பார்த்துவிடலாம். தியேட்டரில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் படங்கள் ஓடிடிக்கு வந்துவிடுகின்றன. இதனால் தியேட்டருக்கு செல்வோர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இதில் சில படங்கள் நேரடியாகவே ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன.
Theatre
அழியும் தியேட்டர்கள்
இதனால் தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படும் அவலநிலையும் இங்கு தொடர்ந்து வருகிறது. மல்டிபிளக்ஸுகளின் வரவால் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் படிப்படியாக அழிந்து வருகின்றன. தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தான் படம் பார்க்கிறார்கள். மக்கள் வருகையை அதிகரிக்க மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் லேட்டஸ்டாக வைத்துள்ள கோரிக்கை பேசுபொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... உதயத்தை தொடர்ந்து சென்னையில் மூடப்பட்ட ரஜினி தியேட்டர் - இத்தனை ஆண்டு பழமையானதா?
PVR Inox
தியேட்டரில் மது விற்பனை
அது என்னவென்றால் பெங்களூரு மற்றும் கூர்கானில் உள்ள பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் மது விற்பனை செய்ய அனுமதி கோரி உள்ளனர். வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும், ரசிகர்களுக்கு ப்ரீமியர் அனுபவத்தை கொடுக்கவும் இதுபோன்ற திட்டங்களை அறிமுகம் செய்ய முன்வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் இதனை செயல்படுத்த அனுமதி கோரி இருக்கிறார்கள். இது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.
Cinema Theatre
பார் ஆக மாறப்போகிறதா தியேட்டர்கள்?
இதுவரை மது அருந்தியவர்களுக்கு தியேட்டருக்குள் அனுமதி கிடையாது என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் திரையரங்குகள் மதுக் கூடங்களாக மாறிவிடும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படி தியேட்டரிலேயே மது விற்பனை செய்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக திரையரங்குகள் மாறிவிடும் என்றும் சிலர் சாடி வருகிறார்கள். இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என எதிர்ப்பு குரல்களும் தற்போது எழுந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... நிரந்தரமாக மூடப்பட்ட பிரபல உதயம் தியேட்டர்! வாங்கியது யார்? அங்கு என்ன வரப்போகிறது தெரியுமா?