MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உதயத்தை தொடர்ந்து சென்னையில் மூடப்பட்ட ரஜினி தியேட்டர் - இத்தனை ஆண்டு பழமையானதா?

உதயத்தை தொடர்ந்து சென்னையில் மூடப்பட்ட ரஜினி தியேட்டர் - இத்தனை ஆண்டு பழமையானதா?

சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகள் வரிசையாக மூடுவிழா கண்டுவரும் நிலையில், தற்போது ரஜினி தியேட்டர் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 12 2025, 02:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Chennai Sri Brinda Theatre Closed : சென்னையின் அடையாளமாக இருந்து வரும் தியேட்டர்கள் வரிசையாக மூடுவிழா காண்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் சென்னை அசோக் பில்லர் பகுதியில் இயங்கி வந்த உதயம் தியேட்டர் முழுவதுமாக இடிக்கப்பட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற திரையரங்கமான ஸ்ரீ பிருந்தா தியேட்டர் அதன் ஓட்டத்தை நிறுத்தி உள்ளது.

24
Sri Brinda Theatre

Sri Brinda Theatre

வடசென்னை மக்களுக்காக கடந்த 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட இந்த தியேட்டர் கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை திரையிட்டு வந்தது. வட சென்னையில் திறக்கப்பட்ட முதல் ஏசி தியேட்டர் இதுவாகும். இந்த தியேட்டரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் திறந்து வைத்தாராம். இந்த தியேட்டரை பிருந்தா திரையரங்கம் என அழைப்பதைவிட ரஜினி தியேட்டர் என்று தான் அழைப்பார்களாம்.

இதையும் படியுங்கள்... ரூ.20 டிக்கெட் முதல்; வேட்டையன் வரை! பல ஹிட் படங்களை வெளியிட்ட உதயம் அஸ்தமனம் ஆனது!

34
Rajini Theatre

Rajini Theatre

ரஜினி ரசிகரால் கட்டப்பட்ட இந்த தியேட்டரில் எந்த ரஜினி படம் வந்தாலும் தவறாமல் திரையிடுவார்களாம். அதன் காரணமாகவே இதை ரஜினி தியேட்டர் என அழைத்து வந்துள்ளனர். இந்த தியேட்டரில் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அதிகபட்சமாக 200 நாட்கள் ஓடி இருக்கிறது. இதுதவிர ரஜினியின் பாண்டியன், அண்ணாமலை ஆகிய திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிவிழா கண்டுள்ளன.

44
Sri Brinda Theatre Closed

Sri Brinda Theatre Closed

சென்னை பெரம்பூர் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக இந்த தியேட்டர் இயங்கி வந்தது. சினிமாஸ்கோப்பில் படங்களை திரையிட்டது முதல் தற்போது டிரெண்டில் உள்ள டிஜிட்டல் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் கடந்து வந்த பெருமை இந்த தியேட்டருக்கு உண்டு. உதய கீதம் படத்தின் மூலம் கடந்த 1985-ம் ஆண்டு முதல் இயங்க தொடங்கிய இந்த தியேட்டரில் கடைசியாக டிராகன் படம் திரையிடப்பட்டது. கடந்த திங்கள்கிழமை இரவு இந்த தியேட்டரில் கடைசி காட்சி திரையிடப்பட்டது.

இதையும் படியுங்கள்... தரைமட்டமாகும் சினிமா கோட்டை! இடிக்கப்படும் உதயம் தியேட்டர்; மனமுடைந்த ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாண்டியன் உடன் ஓடிப்போயிட்டாளோ? வானதியின் பெற்றோருக்கு வந்த டவுட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
Pandian Stores 2 E705 Today: அன்பால் இணைந்த கதிர்-ராஜி.! கோபத்தால் பிரிந்த செந்தில்-மீனா.! இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஹைலைட்ஸ்!
Recommended image3
விபத்தில் பறிபோன அருண் அம்மாவின் உயிர்... முத்து மீது விழும் பழி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved