MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijay - Ajith : முதல்வன் முதல் நந்தா வரை... விஜய் - அஜித் நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் இத்தனையா?

Vijay - Ajith : முதல்வன் முதல் நந்தா வரை... விஜய் - அஜித் நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் இத்தனையா?

Vijay - Ajith Rejected Movies : கோலிவுட்டில் டாப் ஹீரோக்களாக கோலோச்சிய விஜய்யும், அஜித்தும் ஏராளமான படங்களை ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள். அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Oct 07 2026, 06:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
விஜய்   அஜித் மிஸ் பண்ணிய படங்கள்
Image Credit : X

விஜய் - அஜித் மிஸ் பண்ணிய படங்கள்

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவரும் பல ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். இவர்களுக்காக எழுதப்பட்ட பல கதைகள், சில காரணங்களால் இவர்களிடம் இருந்து கைமாறி வேறு நடிகர்களை சென்றடைந்துள்ளன. அதில் சில படங்கள் அந்த நடிகர்களின் திரைப்பயணத்தையே மாற்றியமைத்திருக்கின்றன.

ஒரு நல்ல கதைக்கு சரியான நடிகர் அமைவது திரைப்படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும். அதேபோல், முன்னணி நடிகர்கள் ஏற்க மறுத்த கதைகள் வேறு ஹீரோக்களிடம் சென்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சம்பவங்களும் தமிழ் சினிமாவில் ஏராளம். அப்படி விஜய், அஜித் ஆகியோர் தவறவிட்டதாக கூறப்படும் சில முக்கியமான பட வாய்ப்புகளைப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
அஜித்திற்கு பதிலாக சூர்யாவை அறிமுகப்படுத்திய ‘நேருக்கு நேர்’
Image Credit : our own

அஜித்திற்கு பதிலாக சூர்யாவை அறிமுகப்படுத்திய ‘நேருக்கு நேர்’

1997-ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தில் முதலில் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஏற்கனவே ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்ததால், இந்த கூட்டணி மீண்டும் தொடரும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக அஜித் அந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக சூர்யா தேர்வு செய்யப்பட்டார். சினிமாவில் சூர்யாவின் ஆரம்ப கால பயணத்தில் இந்த படம் முக்கியமான படியாக அமைந்தது.

ஆரம்பத்தில் நடனம் மற்றும் நடிப்பு சார்ந்த விஷயங்களில் சிரமங்களை எதிர்கொண்டாலும், தொடர்ந்து பயிற்சி செய்து தனது நடிப்பை மேம்படுத்திக் கொண்ட சூர்யா, பின்னர் வசந்த் இயக்கிய ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்திலும் நடித்தார்.

39
விஜய் தவறவிட்ட ‘முதல்வன்’
Image Credit : our own

விஜய் தவறவிட்ட ‘முதல்வன்’

ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் திரைப்படத்தின் கதையை முதலில் ரஜினிகாந்திடம் கூறியதாகவும், பின்னர் அந்த வாய்ப்பு விஜயை நோக்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அரசியல் பின்னணி கொண்ட கதையில் நடிப்பது குறித்து விஜய் தரப்பில் தயக்கம் ஏற்பட்டதாம். இதையடுத்து அந்த வாய்ப்பு அர்ஜுனிடம் சென்றது.

அர்ஜுன் நடித்த முதல்வன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன், அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாகவும் மாறியது. விஜய் அந்த கதையை ஏற்றிருந்தால் அவரது திரைப்பயணத்தில் அது எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் விஷயமாகவே உள்ளது.

49
‘நந்தா’ அஜித் விலகியதால் சூர்யாவுக்கு கிடைத்த திருப்புமுனை
Image Credit : X

‘நந்தா’ அஜித் விலகியதால் சூர்யாவுக்கு கிடைத்த திருப்புமுனை

பாலா இயக்கிய நந்தா திரைப்படத்திற்காக ஆரம்பத்தில் அஜித்தை பரிசீலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் அஜித் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போன நிலையில், அந்த கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார். ‘நந்தா’ சூர்யாவின் நடிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய படமாக பார்க்கப்படுகிறது.

கதாபாத்திரத்திற்காக அவர் காட்டிய ஈடுபாடும் கடின உழைப்பும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்தது. இதனால் சூர்யாவின் திரைப்பயணத்தை ‘நந்தாவுக்கு முன், நந்தாவுக்குப் பின்’ என பிரித்துப் பார்க்கும் அளவுக்கு இந்த படம் முக்கியத்துவம் பெற்றது.

59
விஜய் மறுத்த ‘உன்னை நினைத்து’
Image Credit : our own

விஜய் மறுத்த ‘உன்னை நினைத்து’

‘பூவே உனக்காக’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் விக்ரமன் – விஜய் கூட்டணி மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த நிலையில் உருவான உன்னை நினைத்து படத்தில் ஆரம்பத்தில் விஜய் நடித்தார். அவரை வைத்து பாடல் காட்சியை படமாக்கினார் விக்ரமன். பின்னர் கிளைமாக்ஸ் தொடர்பான கருத்து வேறுபாட்டால் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.

இதன் பின்னர் அந்த கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதன் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. மீண்டும் விஜய் – விக்ரமன் கூட்டணி எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விக்கும் இந்த படம் வழிவகுத்தது.

69
‘காக்க காக்க’ அஜித் மறுத்ததால் சூர்யாவுக்கு கிடைத்த போலீஸ் ஹீரோ இமேஜ்
Image Credit : our own

‘காக்க காக்க’ அஜித் மறுத்ததால் சூர்யாவுக்கு கிடைத்த போலீஸ் ஹீரோ இமேஜ்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தின் கதையை முதலில் விக்ரமிடம் கூறியதாகவும், பின்னர் அஜித்திடமும் கதை சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் அந்த வாய்ப்பை ஏற்காத நிலையில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். போலீஸ் அதிகாரி அன்புச்செல்வன் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்த விதம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் சூர்யாவின் ஆக்ஷன் ஹீரோ இமேஜுக்கும் வலுவான அடித்தளத்தை அமைத்தது.

79
விஜய் நிராகரித்த ‘சண்டக்கோழி’
Image Credit : X

விஜய் நிராகரித்த ‘சண்டக்கோழி’

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி திரைப்படத்தின் கதையை முதலில் விஜயிடம் தான் கூறியிருந்தார்கள். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராஜ்கிரண் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பது தொடர்பாக விஜய்க்கு தயக்கம் ஏற்பட்டதாம். இதனால் அந்த வாய்ப்பு விஷாலிடம் சென்றது. வெளியான பிறகு ‘சண்டக்கோழி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், விஷாலின் ஆக்ஷன் ஹீரோ பயணத்திற்கும் முக்கியமான படமாக அமைந்தது.

89
அஜித் தவறவிட்ட ‘கஜினி’
Image Credit : our own

அஜித் தவறவிட்ட ‘கஜினி’

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதலில் உருவாக்கப்பட்ட ‘மிரட்டல்’ கதை பின்னர் மாற்றம் பெற்று கஜினி திரைப்படமாக உருவானது. இந்த கதையில் முதலில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும், பின்னர் சூர்யா கதாநாயகனாக நடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. சூர்யா நடித்த கஜினி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சூர்யா இருவரின் திரைப்பயணத்திலும் முக்கிய மைல்கல்லாக மாறியது.

99
‘ஆட்டோகிராப்’ விஜய் ரிஜெக்ட் செய்த கதை
Image Credit : X

‘ஆட்டோகிராப்’ விஜய் ரிஜெக்ட் செய்த கதை

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படத்தின் கதையும் முதலில் விஜயிடம் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கதையில் தனக்கான வலுவான கதாபாத்திரம் இல்லை என விஜய் கருதியதால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை. இதையடுத்து சேரனே கதாநாயகனாக நடித்தார். வெளியான பிறகு ‘ஆட்டோகிராப்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், சேரனின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
அஜித் குமார்
தளபதி விஜய்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
அம்மாவை ரொம்ப பிடிக்குமா? அப்போ இந்த 7 படங்களை மிஸ் பண்ணிடாதீங்க!
Recommended image2
லயோலா காலேஜில் இத்தனை டாப் ஹீரோஸ் படிச்சிருக்காங்களா? அசர வைக்கும் லிஸ்ட் இதோ
Recommended image3
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் அதிரடி ட்விஸ்ட்... அக்‌ஷிதா – அவினாஷுக்கு செக் வைத்த அஸ்மிதா – பிரித்வி!
Related Stories
Recommended image1
Vijay - Ajith: முதல்வர் விஜய்க்கு அஜித் எழுதிய கடிதம்.. ஒரே பாராட்டு மழை! அப்படி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
Recommended image2
CM Vijay : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved