- Home
- Cinema
- தமிழ் ராக்கர்ஸின் சிஷ்யன்... கையும் களவுமாக சிக்கிய ஐபொம்மா ரவி - அதிரடியாக கைது செய்த போலீஸ்
தமிழ் ராக்கர்ஸின் சிஷ்யன்... கையும் களவுமாக சிக்கிய ஐபொம்மா ரவி - அதிரடியாக கைது செய்த போலீஸ்
ஐபொம்மா என்கிற பைரசி தளத்தை நடத்தி வந்த இம்மடி ரவியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரின் கைதால் தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

iBomma Ravi Arrested
திரையுலகை நீண்டகாலமாக பாதித்து வரும் மிகப்பெரிய பிரச்சனை பைரசி. படம் வெளியான மறுநாளே, பைரசி பதிப்பு இணையதளங்களில் வெளியாவதால், புதுப்படங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. ஏராளமான பைரசி தளங்கள். தமிழ்நாட்டில் தமிழ்ராக்கர்ஸ் என்கிற பைரசி தளம் இயங்கி வந்ததை போல் ஆந்திராவில் ஐபொம்மா என்கிற பைரசி தளம், டோலிவுட்டுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வந்தது.
சாமானியர்களையும் குறிவைத்து கொண்டுவரப்பட்ட எளிதான செயலிதான் ஐபொம்மா. இது மிகக் குறைந்த நேரத்தில் பெரும் பிரபலமடைந்தது. வெளிநாட்டில் இருந்துகொண்டு, போலீசாருக்கும் சட்டத்திற்கும் சிக்காமல், புதுப்படங்களை பைரசி செய்து, தரமான பதிப்பை இலவசமாக ஐபொம்மா செயலியில் பதிவேற்றி வந்தனர். இவர்களைப் பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.
ஐபொம்மா ரவி கைது
இந்த நிலையில், ஐபொம்மா நிர்வாகி இம்மடி ரவியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டன. வங்கிக் கணக்கில் இருந்த 3 கோடி ரூபாய் முடக்கப்பட்டது. பைரசி மட்டுமின்றி, ஆன்லைன் பெட்டிங் ஆப்களுடனும் ரவிக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யார் இந்த ஐபொம்மா ரவி?
மும்பை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்த இம்மடி ரவி, சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார். பின்னர் நெதர்லாந்து சென்று, சர்வர்களை ஹேக் செய்து பைரசி நெட்வொர்க்கை நடத்தியுள்ளார். இம்மடி ரவி என்கிற ஐபொம்மா ரவி, 2022-ல் இந்திய குடியுரிமையை துறந்தார். பின்னர் சுமார் 80 லட்சம் செலுத்தி கரீபியன் நாட்டில் குடியுரிமை பெற்றார். அன்று முதல் அங்கேயே ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
ஐபொம்மா ரவி சிக்கியது எப்படி?
ரவி ஒரு தொழில்நுட்ப வல்லுநர். DRM ஹேக்கிங் மூலம் OTT உள்ளடக்கத்தை காப்பி செய்து, iBomma இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். போலீசார் தகவல்படி, ரவி சுமார் 60 பைரசி தளங்களை நடத்தியுள்ளார். நவம்பர் 15 அன்று நெதர்லாந்தில் இருந்து ஹைதராபாத் வந்த ரவியை, குக்கட்பள்ளி பகுதியில் போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் இருந்து பைரசி நெட்வொர்க்கை இயக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

