லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு டிமிக்கி கொடுத்த ரவீந்தர்.. வழக்குப்பதிவு செய்து போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்
வெளிநாட்டு வாழ் இந்தியர் அளித்த புகாரின் அடிப்படையில் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர். இவர் தனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், மிக மிக அவசரம் போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவர் கடந்தாண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் மிகவும் பேசு பொருள் ஆனது. இதன்மூலம் சோசியல் மீடியாவில் மிகவும் பேமஸ் ஆகிவிட்டார் ரவீந்தர்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது பணமோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி விஜய் என்கிற அமெரிக்க வாழ் இந்தியர் தான் ரவீந்தர் மீது பணமோசடி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ரவீந்தர், கிளப் ஹவுஸ் என்கிற செயலி மூலம் தன்னிடம் பழகியதாகவும், இதையடுத்து சினிமா நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் எனக்கூறி கடந்த மே மாதம் ரூ.20 லட்சம் கடனாக கேட்டார்.
இதையும் படியுங்கள்... மனோரமா வீட்டில் நடந்த திருட்டு... திருடனை விரட்டிப்பிடித்து வெளுத்துவிட்ட விஜயகாந்த் - ரியல் லைஃப் சம்பவம்
நான் என்னிடம் ரூ.15 லட்சம் தான் இருப்பதாக கூறி அதனை இரு தவணையாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தினேன். பணம் வாங்கிய ரவீந்தர், சொன்னபடி பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வருகிறார். பணத்தை கேட்டால் சில நேரங்களில் அவதூறாக பேசினார். தற்போது எனது மொபைல் எண்ணை பிளாக் செய்துள்ளார். அவரிடம் இருந்து என்னுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும். அவருக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என அந்த புகாரில் விஜய் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தன்மீதான புகாரை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும் தான் பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் ரவீந்தர் தரப்பில் சமாதானம் பேசியதாக தெரிகிறது. ஆனால் தற்போது வரை விஜய்க்கு பணம் திரும்ப கிடைக்காததால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ரவீந்தரும் நேரில் ஆஜராக விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ‘இதெல்லாம் ஒரு மூஞ்சா’னு கேவலமா பேசி... கீர்த்தி சுரேஷை ஓரங்கட்ட பார்த்தாங்க - பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்