Drishyam 3: 'திரிஷ்யம் 3' படத்தை உறுதி செய்த மோகன் லால்!
மலையாள சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரிஷ்யம் 3 படம் உருவாவதை மோகன் லால் உறுதி செய்துள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால்:
தென்னிந்திய மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் தான் த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா, எஸ்தர் அலி, ஆஷா சர்த், சித்திக், கலாபவன் மணி, ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் தான் திரிஷ்யம். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் காரணமாக இந்தப் படம் தமிழில் கமல் ஹாசன், கௌதமி ஆகியோரது நடிப்பில் பாபநாசம் என்ற டைட்டிலில் வெளியானது.
பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷ்யம்
அதே போல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்தின் 2ஆம் பாகம் வெளியானது. இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ஓடிடியிலும் மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்தனர். இந்த படம் வெளியான பிறகு திரிஷ்யம் ஜீத்து ஜோசப்பின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டிருந்தார்.
Baakiyalakshmi: முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்? சுசீத்ரா ஷெட்டி செயலால் எழுந்த சந்தேகம்!
திரிஷ்யம் 3 படத்தின் அறிவிப்பு
இந்த நிலையில் தான் திரிஷ்யம் 3 படத்தின் அறிவிப்பு குறித்து மோகன் லால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த காலம் ஒருபோதும் அமைதியாக இருக்காது. திரிஷ்யம் 3 உறுதி செய்யப்பட்டது என்று பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குநர் ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மோகன்லால் கைவசம் உள்ள படங்கள்
திரிஷ்யம் 3 படம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மோகன் லால் நடிப்பில் கடைசியாக பாரோஸ் படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தின் மூலமாக அவர் இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருநார். தற்போது மம்மூட்டியுடன் இணைந்து MMMN படத்தில் நடித்து வருகிறார். மேலும், துடரும், எல் 2 எம்புறான், கண்ணப்பா, விருஷாபா, ஹிருதயபூர்வம், ராம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Singappenne: உண்மையை உடைத்த ஆனந்தி - அடிவாங்கி அசிங்கப்படும் அன்பு! நெட்டிசன்களின் ரியாக்ஷன் இதோ!