ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெயிலர் ரஜினிகாந்துடன் யங் லுக்கில் மோகன்லால்! தீயாக பரவும் புகைப்படம்!
'ஜெயிலர்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மோகன்லால் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
கடந்த ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் வெளியானது. கிராமத்து காளையனாக ரஜினிகாந்த் நடித்திருந்த இந்த திரைப்படத்தில், நயன்தாரா ரஜினிகாந்த்துக்கு ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்திருந்தனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பூ, லிவிங்ஸ்டன், மீனா, பாண்டியராஜன், சூரி பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பல நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், தலைவரின் மாஸ் காட்சியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் குடும்ப தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து, தற்போது கோலமாவு கோகிலா டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியனாக கெத்தான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடித்து வருகிறார். மேலும் வசந்த ரவி, யோகி பாபு ரோபோ சங்கர், சுனில் போன்ற பல இப்படத்தில் இணைத்துள்ளனர்.
தீராத முழங்கால் வலி... ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் நடிகர் அருண் விஜய்! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!
மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ரஜினிக்கு வில்லனாகவும், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப் மற்றொரு வில்லனாகவும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கெஸ்ட் ரோலிலும் நடிக்க உள்ளனர்.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கு மேல் முடிந்துவிட்ட நிலையில், அவ்வபோது இப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களைஇன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில்... ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்து வரும் மோகன் லால், ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் தீயாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கையில் குழந்தையோடு ஷாருகான்..! அட இது அட்லீ - பிரியா தம்பதியின் மகனா? வைரலாகும் புகைப்படம்..!