Mohan reentry : ரீ என்ட்ரி கொடுக்கும் 80ஸ் நாயகன் மோகன்... யார் இயக்கத்தில் தெரியுமா?
80ஸ் களில் கலக்கி வந்த மைக் மோகன் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும், அவர் தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Mohan re entry
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வருவார் என அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோக்களில் ஒருவர் நடிகர் மோகன் (Actor mohan). இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
Mohan re entry
மிக குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தது மட்டும் இன்றி இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், ஹீரோவாக நடிக்க உள்ள தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Mohan re entry
'மூடு பனி' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மைக் மோகன். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, 'நெஞ்சத்தை கிள்ளாதே' திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
Mohan re entry
இதை தொடர்ந்து வெளியான கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் செய்வதில்லை போன்ற படங்கள், ஒரு வருடத்திற்கு மிகாமல் ஓடி, தமிழ் சினிமாவில் இவரை நிலைக்க செய்தது.
Mohan re entry
மிக குறுகிய காலத்தில் எப்படி முன்னணி இடத்தை இவர் பிடித்தாரோ, அதே வேகத்தில் திரையுலகத்தி விட்டும் விலகினார். இவர் மீது காதல் கொண்ட நடிகை ஒருவர் காதலை வெளிப்படையாக கூறியும் இவர் ஏற்று கொள்ளாததால், இவருக்கு எ....ஸ் நோய் இருப்பதாக கூறி விட்டுஅந்த நடிகை ஜாலியாக திரையுலகிற்கு டாட்டா காட்டிவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
Mohan re entry
ஆனால் இவரின் திரையுலக வாழ்க்கை பாழாய் போனது. எனினும் நடிகை சொன்னதை பொய்யாக்கும் விதத்தால், தற்போது வரை நடிகர் மோகன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து தான் வருகிறார்.
Mohan re entry
தற்போது வரை நடிகர் மோகன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து தான் வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு, 'சுட்டப்பழம்' என்கிற படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து இவர் நடிப்பில், கன்னடம் தெலுங்கு, ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படமும் பெரிதாக வெற்றிபெறவில்லை.
Mohan re entry
தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வ தகவல், டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. 'சில்வர் ஜூபிலி ஸ்டார்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, 'தாதா7' என்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்க உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.