ரெட் ஜெயண்ட் சொத்து மதிப்பு ரூ.2000 கோடியாம்... என்னென்ன சொல்றாங்க பாருங்க - உதயநிதி கலகல பேச்சு
2023-ம் ஆண்டுக்கான தக்ஷின் மாநாடு இன்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு தொடர்புடைய வழிகாட்டுதலை வருங்கால சந்ததியினருக்கு வழங்கும் வகையில் தக்ஷின் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டிற்கான தக்ஷின் மாநாடு சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்கான துவக்க விழாவின் நடிகர் கார்த்தி, நடிகை மஞ்சு வாரியர், இயக்குனர் வெற்றிமாறன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது : “தமிழ் திரையுலகில் 2007-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நான் பயணித்திருக்கிறேன். ரெட் ஜெயண்ட் மூவிஸ் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். 15 படங்கள் நேரடியாகவே தயாரித்திருக்கிறேன். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அதுதவிர நல்ல நல்ல படங்களை வெளியிட்டும் இருக்கிறேன்.
இதையும் படியுங்கள்... ஆஸ்கர் வாங்குறதுலாம் மேட்டர் இல்ல... இதுதான் முக்கியம் - இயக்குனர் வெற்றிமாறன் நெத்தியடி பேச்சு
எனக்கும் ரெட் ஜெயண்ட்டுக்குமான தொடர்பு எல்லாருக்குமே தெரியும். இப்போ கூட ஒரு 3 நாள் முன்னாடி ஒருத்தர், ரெட் ஜெயண்ட் ஓட சொத்து மதிப்பு 2000 கோடினு சொல்லிருந்தாரு. அத பத்தி நான் பேச விரும்பல. ஒரு தயாரிப்பாளரோட கஷ்டம் என்னன்னு இன்னொரு தயாரிப்பாளருக்கு தெரியும். ரெட் ஜெயண்ட் உடைய மதிப்பு என்னென்னு கண்டிப்பா உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா அவங்கெல்லாம் சும்மா போற போக்குல அடிச்சுவிட்டு போறாங்க” என கூறினார்.
உதயநிதியின் பேச்சைக்கேட்டு இயக்குனர் வெற்றிமாறன், காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டி, நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் சிரித்தனர். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.2000 என சொன்னது வேறுயாரும் இல்லை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான். கடந்த சில தினங்களுக்கு முன் DMK files என்கிற பெயரில் திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அதில் அவர் சொன்னதை தான் தற்போது தக்ஷின் மாநாட்டில் கிண்டலடித்து பேசி இருக்கிறார் உதயநிதி.
இதையும் படியுங்கள்... குஷ்பு மட்டும் என் லைஃப்ல வராம இருந்திருந்தா... கண்டிப்பா அந்த நடிகைக்கு புரபோஸ் பண்ணிருப்பேன் - சுந்தர் சி