நீ தான் பாடணும்; ஒற்றைக்காலில் நின்ற MGR! SPB குரலுக்காக 2 மாதம் காத்திருந்து கம்போஸ் செய்யப்பட்ட பாட்டு
இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாட வேண்டும் என்று எம்ஜிஆர் ஒற்றைக்காலில் நின்றதால் 2 மாதம் காத்திருப்புக்கு பின் கம்போஸ் செய்யப்பட்ட பாடல் பற்றி பார்க்கலாம்.
MGR, SPB
‘இந்த தேகம் மறைந்தாலும்... இசையாய் மலர்வேன்’ என்கிற பாடல் வரியை கேட்ட பின்னர் அனைவருக்கும் முதலில் மனதுக்கு வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான். அவருடைய குரல்களால் மெருகேறிய பாடல்கள் ஏராளம். இத்தகைய சாதனைக் கலைஞனான எஸ்.பி.பி, அவரது குரலில் முதன்முதலில் பாடிய தமிழ் பாடல் ஆயிரம் நிலவே வா என்கிற பாட்டு தான். எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண் படத்துக்காக அவர் இப்பாடலை பாடினார்.
SPB
இந்த பாடல் உருவானதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதையும் இருக்கிறது. அதன்படி ஒருநாள் ஏவிஎம் ஸ்டூடியோவில் எம்ஜிஆர் தன்னுடைய பட விஷயமாக ஆலோசனையில் இருந்தபோது அருகே உள்ள செட்டில், தெலுங்கு பட பாடல் கம்போஸிங் ஒன்று நடைபெற்று இருக்கிறது. அதில் எஸ்.பி.பி பாடிக்கொண்டிருந்தாராம். அவரின் குரலை கேட்டு மெய் மறந்துபோன எம்.ஜி.ஆர் யாருப்பா இவ்வளவு அழகாக பாடுவது என கேட்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... எத்தன வருஷம் ஆனாலும் விடமாட்டேன்! ஆர்த்தியின் கஸ்டடியில் இருக்கும் மகன்கள்... மீட்க போராடும் ஜெயம் ரவி
SPB First Song
பின்னர் எஸ்.பி.பியை நேரில் அழைத்து தன்னுடைய படத்தில் நீ கண்டிப்பாக பாட வேண்டும் என சொல்லி இருக்கிறார் எம்.ஜி.ஆர். தமிழில் முதல் பாடலே எம்.ஜி.ஆருக்கா என பூரிப்படைந்த எஸ்.பி.பி அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். மறுநாள் எஸ்.பி.பிக்கு டைபாயிடு காய்ச்சல் வந்துவிடுகிறது. இதனால் எஸ்.பி.பியால் அந்த பாடல் பாட முடியாமல் போகிறது.
SPB First Song For MGR
எம்.ஜி.ஆருக்கு பாட்டு பாட முடியவில்லையே என்கிற சோகத்தில் இருந்திருக்கிறார் எஸ்.பி.பி. அப்போது தான் எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இந்தப் பாடலை நீ தான் பாடப்போகிறாய். உனக்கு உடல்நலம் சரியாகும் வரை காத்திருந்து அதன் ரெக்கார்டிங்கை வைத்துக் கொள்கிறோம் என சொல்லி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.
Adimai Penn Movie Song
இப்படி எஸ்.பி.பி.யின் இசைப்பயணத்தை தமிழில் தொடங்கி வைத்த பாடல் தான் எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் இடம்பெறும் ஆயிரம் நிலவே வா பாடல். எஸ்.பி.பிக்காக எம்.ஜி.ஆர் சுமார் 2 மாதங்கள் வரை காத்திருந்து பின்னர் ரெக்கார்டு செய்யப்பட்ட இந்த பாடல் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.
இதையும் படியுங்கள்... 69 வயதில் கின்னஸ் உலக சாதனை படைத்தார் சிரஞ்சீவி - எதற்காக தெரியுமா?