MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எத்தன வருஷம் ஆனாலும் விடமாட்டேன்! ஆர்த்தியின் கஸ்டடியில் இருக்கும் மகன்கள்... மீட்க போராடும் ஜெயம் ரவி

எத்தன வருஷம் ஆனாலும் விடமாட்டேன்! ஆர்த்தியின் கஸ்டடியில் இருக்கும் மகன்கள்... மீட்க போராடும் ஜெயம் ரவி

Jayam Ravi Aarthi Divorce : 20 வருடம் ஆனாலும் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் விடமாட்டேன் என நடிகர் ஜெயம் ரவி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 23 2024, 09:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jayam ravi family

Jayam ravi family

நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. மனைவியை விவாகரத்து செய்வதாக கடந்த சில வாரங்களுக்கு முன் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், தனக்கு தெரியாமலேயே ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறி ஆர்த்தி குண்டை தூக்கிப் போட்டார். பின்னர் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கும் இருக்கும் தொடர்பே அவருக்கும் ஆர்த்திக்கும் இடையே விரிசல் ஏற்படுவதற்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Jayam Ravi and Aarthi

Jayam Ravi and Aarthi

இதுபற்றி மெளனம் காத்து வந்த ஜெயம் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது இந்த சர்ச்சைகள் குறித்து ஓப்பனாக பேசினார். அதன்படி விவாகரத்து முடிவு என்பது ஆர்த்தியின் பெற்றோருடன் கலந்து ஆலோசித்த பின்னர் எடுக்கப்பட்டதாகவும், அது எப்படி ஆர்த்திக்கு தெரியாமல் இருக்கும் என கேள்வி எழுப்பிய அவர், கெனிஷா உடன் தன்னை தொடர்பு படுத்தி பேசுவது தவறானது என கூறினார்.

கெனிஷா ஒரு பாடகி மட்டுமின்றி ஒரு மனநல ஆலோசகர் என்றும் கூறிய அவர், மன அழுத்தத்தில் இருந்த பலரை அவர் மீட்டெடுத்து உள்ளதாக ஜெயம் ரவி கூறினார். மேலும் கெனிஷா உடன் சேர்ந்து தான் ஒரு ஆன்மிக மையம் ஒன்றை திறக்க உள்ளதாகவும் கூறிய அவர், வாழு வாழவிடு என்றும் கேட்டுக்கொண்டார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் படு வைரல் ஆனது.

இதையும் படியுங்கள்... 69 வயதில் கின்னஸ் உலக சாதனை படைத்தார் சிரஞ்சீவி - எதற்காக தெரியுமா?

34
Singer Kenisha and Jayam ravi

Singer Kenisha and Jayam ravi

இந்த நிலையில், தன் மகன்கள் பற்றியும் அவர்களை கஸ்டடியில் எடுப்பது பற்றியும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார் ஜெயம் ரவி. அவர் கூறியதாவது : என்னுடைய எதிர்காலமே எனது மகன்கள் ஆரவ் மற்றும் அயான் தான். அவர்களை என்னுடைய கஸ்டடியில் எடுக்க போராடுவேன். விவாகரத்துக்காக 10 ஆண்டுகள் என்ன 20 ஆண்டுகள் கூட கோர்ட்டில் போராட தயாராக இருக்கிறேன். எனது சந்தோஷமே என்னுடைய மகன்கள் தான். என்னுடைய மகனை வைத்து நான் படம் தயாரிக்கவும் திட்டமிட்டு இருந்தேன். அது என்னுடைய கனவு என்றும் ஜெயம் ரவி தெரிவித்தார்.

44
Jayam ravi Divorce

Jayam ravi Divorce

ஆர்த்தி உங்களுடன் சமரசம் செய்ய விரும்புகிறாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த ஜெயம் ரவி, அவரிடம் சமரசம் செய்யும் எண்ணம் இருந்தால் ஏன் காதலி பற்றி பரப்ப வேண்டும். இந்த விவாகரத்தில் கெனிஷாவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என ஜெயம் ரவி ஓப்பனாகவே கூறி இருக்கிறார். இதன்மூலம் விவாகரத்தை தாண்டி ஆர்த்தி, ஜெயம் ரவி இருவரும் மகன்களுக்காக கோர்ட்டில் போராட உள்ளார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... "அம்மா இயற்கை எய்தினார்".. பிரபல நடிகையின் மறைவு - வீடியோ வெளியிட்டு வருந்திய கமல்ஹாசன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயம் ரவி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved