டிபன் சாப்பிட சென்ற மனோ.. அந்த கேப்பில் ஒரு மெகா ஹிட் பாடலை எழுதிய வாலி - எந்த பாட்டு தெரியுமா?
Singer Mano And Vali : பாடலாசிரியர் மற்றும் வாலிப கவிஞர் வாலியின் வரிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார் பாடகர் மனோ.
Singer Mano
வாலிப கவிஞர் என்ற செல்லப்பெயருடன் வலம்வந்தவர் தான் வாலி. காரணம் வயது ஏறிக்கொண்டே போனாலும் தனது வரிகளில் இளமையை அதிகரித்துக்கொண்டே இருந்தவர் அவர். இவருடைய பாடல் வரிகளால் மெகா ஹிட்டான நடிகர்கள் ஏராளம். எம்.ஜி.ஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை பல தலைமுறை நடிகர்களை கண்ட மாமேதை வாலி. ஒருமுறை எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தை எடுக்க ஆயத்தமானார். அப்போது அந்த படத்தில் ஒலிக்க உள்ள 11 பாடல்களில் 5 பாடல்களை வாலி தான் எழுதுவதாக இருந்தது.
ஆனால் வாலியை கலாய்க்க நினைத்த எம்.ஜி.ஆர், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் கண்ணதாசன் தான் எழுதப்போகிறார். ஆகையால் உங்களுக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்பர் கூறி வாலியிடம் சொல்ல, சற்றும் யோசிக்காமல் "என்னுடைய பெயர் இல்லாமல் இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்யவே முடியாது என்று" எம்.ஜி.ஆரிடம் அடித்து கூறியுள்ளார். வியந்து போன எம்.ஜி.ஆர் எப்படி என்று கேட்க, உங்கள் படத்தின் பெயர் "உலகம் சுற்றும் வாலிபன்".. ஆகையால் அதில் வாலியை எடுத்துவிட்டால்
"உலகம் சுற்றும் பன்" என்று தானே வரும் என்று கூற, அவரை கட்டியணைத்து, முத்தமிட்டு தனது படத்தில் பாடல்களை எழுத சொல்லியுள்ளார் எம்.ஜி.ஆர்.
Lyricist Vaali
அன்று தொடங்கிய வாலியின் பயணம், பல ஆண்டு காலம் தமிழ் சினிமாவை செழிப்போடு வளர வைத்தது என்றே கூறலாம். அவருடைய மரணத்திற்கு முன்னால் அவர் கொடுத்த ஒரு பேட்டியில், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் குறித்து ஒரு விஷயத்தை பேசி இருந்தார். கடந்த 2001ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான "தீனா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். அந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள், அதில் மூன்று பாடல்களுக்கு வரிகள் எழுதியது வாலிபக் கவிஞர் வாளி தான்.
அப்போது தன்னுடைய முதல் பாடலை வாலியிடம் வாங்க, அவரைக் காண வீட்டுக்கு சென்றிருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ். அவர் சென்றதுமே "வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுர வரையில" என்கின்ற வரிகளை முருகதாஸிடம், வாலி கூற, திகைத்துப் போய் வாலியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாராம் ஏ.ஆர் முருகதாஸ்.
உடனே கடுப்பான வாலி, இதற்குத்தான் புதிய இயக்குனர்களுக்கு நான் பாட்டு எழுதுவதில்லை. வரிகள் பிடித்திருந்தால் பிடித்து இருக்கிறது என்று சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் சொல்லுங்கள் மாற்றுகிறேன் என்று கூற, அய்யய்யோ இல்லை சார்.. என்னுடைய படத்தில் அஜித் எப்பொழுதுமே வாயில் ஒரு வத்திக்குச்சியை வைத்துக்கொண்டு வருவது போலத்தான் காட்சிகளை அமைத்திருக்கிறேன். நீங்களும் அதையே பாட்டிலும் வைத்து எழுதி இருக்கிறீர்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறி உடனே அந்த பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களை வைத்து பட வைத்திருக்கிறார்.
Singer Mano
கடந்த 2004ம் ஆண்டு பிரபல இயக்குனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "நியூ". இந்த திரைப்படத்துக்காக 2001ம் ஆண்டு மொத்தம் 10 பாடல்களை இசையமைத்திருந்தார் தேனிசைத் தென்றல் தேவா. ஆனால் அந்த திரைப்படம் மேற்கொண்டு நகராமல் இருந்த நிலையில், தேவா அந்த படத்தில் இருந்து விளக்குகிறார். சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து 2004 ஆம் ஆண்டு மீண்டும் அந்த திரைப்படம் உருவாக துவங்கியது.
இந்த படத்திற்கு அப்போது இசையமைத்தது ஏ.ஆர் ரகுமான் தான். மேலும் இப்படத்தில் வந்த ஏழு பாடல்களில் ஐந்து பாடல்களை எழுதியது வாலி தான். குறிப்பாக "சர்க்கரையை இனிக்கிற சக்கர" மற்றும் "கும்பகோணம் சந்தையில" ஆகிய இரண்டு பாடல்களையும் இளமை துள்ளலோடு காமநெடியோடு எழுதி அசத்தியிருப்பார் வாலி. தன்னால் காவியமாகவும் எழுத முடியும், நகைச்சுவையாகவும் எழுத முடியும், காதல் ரசம் தழும்பவும் எழுத முடியும் என்று வாலி நிரூபித்த ஒரு பாடல் தான் அது.
Kadhalan movie
தன்னுடைய பாடல்களில் தொடர்ச்சியாக பல புதுமைகளை ஏற்படுத்திய வாலி பல தனித்துவமான பாடல்களையும் எழுதி இருக்கிறார். அந்த வகையில் கடந்த 1994ம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான "காதலன்" என்கின்ற திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதிய நிலையில், ஒரே ஒரு பாடலை மட்டும் வாலி எழுதியிருந்தார்.
அந்த பாடல் தான் "முக்காலா முக்காப்புலா" என்கின்ற பாடல். இந்த பாடலை பாடகர் மனோ மிக நேர்த்தியாக ஸ்வர்ணலதாவோடு இணைந்து பாடி அசத்தியிருப்பார். மனோவிற்கு மெகா ஹிட் ஆன பல பாடல்களில், இதுவும் ஒன்று. இந்த பாடல் ஒளிப்பதிவு செய்யப்படும் நாள் நெருங்கியது. மனோவும் அன்று பாடலைப் பாட ஸ்டூடியோவிற்கு வந்து விட்டார். ஆனால் பாடல் வரிகள் ரெடியாகாமல் இருந்த நிலையில், வெளியே சென்று மனோ தனது உணவை உண்டுவிட்டு உள்ளே வருவதற்குள், இளமை துள்ளலோடு, ஆங்கில வார்த்தைகளை கொட்டி அந்த பாடலை எழுதி அசத்தியுள்ளார்.
"தேவா இசையில் சூப்பர் ஹிட்டான ராம்ஜியின் சாங்ஸ்" 2K கிட்ஸ் மிஸ் பண்ண ஒரு டக்கர் காம்போ!