- Home
- Cinema
- Meena Daughter Nainika: அழகில் அம்மா மீனாவையே ஓரம் கட்டும்... தெறி பேபி நைனிகா! வேற லெவல் கியூட் போட்டோஸ்!
Meena Daughter Nainika: அழகில் அம்மா மீனாவையே ஓரம் கட்டும்... தெறி பேபி நைனிகா! வேற லெவல் கியூட் போட்டோஸ்!
நடிகை மீனாவின் மகள் நைனிகா ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு அழகு தேவதையாக வளர்ந்துள்ள நிலையில், இவரது லேட்டஸ்ட் போட்டோஸ் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக நடிகர் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நைனிகா. முதல் படத்திலேயே தன்னுடைய மழலை பேச்சால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார் நைனிகா.
அட்லி - விஜய் கூட்டணியில் வெளியான இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், அதன் பின்னர் அரவிந்த் சாமி, அமலா பால் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்தார்.
'தெறி' படத்தில் செம்ம கியூட் குழந்தையாக இருந்த, நைனிகா தற்போது நன்கு வளர்ந்து விட்டார். அவ்வப்போது தன்னுடைய அம்மா மீனாவுடன் சேர்ந்து போட்டோ சுட புகைப்படங்களும் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் கூட மீனாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ சூட் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து, பல போட்டோ ஷூட்டுகளை அவருடைய அம்மா மீனாவுடன் சேர்ந்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் கழுத்தில் வைர நெக்லஸ் அணிந்து... கியூட் தேவதை போல் ஜொலிக்கும் நைனிகாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள்... அழகில் அம்மாவையே நைனிகா மிஞ்சி விட்டதாக கூறி வருகிறார்கள்.