கைதி பட கார்த்தி லுக்கில் விஷால்... வைரலாகும் மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
vishal : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் லத்தி, மார்க் ஆண்டனி போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. இதில் லத்தி படத்தை புதுமுக இயக்குனர் வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் போலீஸாக நடித்துள்ளார் விஷால். இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் இப்படத்தை வெளியிட உள்ளனர்.
இதையடுத்து தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் மார்க் ஆண்டனி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு படத்தொகுப்பு பணிகளை விஜய் வேனுக்குட்டு மேற்கொள்கிறார்.
இதையும் படியுங்கள்... ஸ்கூல் படிக்கும்போதே பிசினஸா..! 10 வயதில் தொழில் தொடங்கிய ஷில்பா ஷெட்டி மகன் - அதுவும் என்ன பிசினஸ் தெரியுமா?
விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசான எனிமி படத்தை தயாரித்த வினோத் குமார் தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷாலின் பிறந்தநாளான இன்று மார்க் ஆண்டனி படத்தில் இடம்பெறும் விஷாலின் தோற்றத்துடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த பர்ஸ்ட் புக் போஸ்டரில் நிறைய தாடியுடன் கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு போஸ் கொடுத்துள்ளார் விஷால். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போது கைதி படத்தில் கார்த்தியை பார்ப்பது போல் தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விஷாலின் இந்த வித்தியாசமான லுக்கிற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... பிரமாண்ட கட்டவுட்டுடன் ரஜினி 47 கொண்டாடிய ரசிகர்கள்..வைரல் வீடியோ